For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ஒரு பொழப்பா...ஒரு ஜெர்ஸிக்கு இப்படியெல்லாமா பன்றது..பஞ்சாப் அணியை கிழிக்கும் நெட்டிசன்ஸ்

பஞ்சாப்: பஞ்சாப் கிங்ஸ் அணி தனது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ள நிலையில் அது இணையத்தில் வைரலாகிறது. ஆனால் நல்ல முறையில் அல்ல, விமர்சனங்களால் ட்ரெண்டாகிறது.

ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது புதிய ஜெர்ஸியை இன்று அறிமுகம் செய்தது.

சென்னை அணிக்காக களம் காணும் 3 முக்கிய வீரர்கள்....வலைபயிற்சியில் தீவிரம்... செம பலம் தான் - வீடியோ! சென்னை அணிக்காக களம் காணும் 3 முக்கிய வீரர்கள்....வலைபயிற்சியில் தீவிரம்... செம பலம் தான் - வீடியோ!

இதனை பார்த்த நெட்டிசன்கள் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு திருட்டுப்பட்டம் அளித்து இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஜெர்ஸி அறிமுகம்

ஜெர்ஸி அறிமுகம்

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக வீரர்கள் தயாராகி வரும் அதே வேளையில் அணிகளிடம் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் பஞ்சாப் அணி இன்று தனது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் இதற்கோ விமர்சனங்கள் தான் எழுந்து வருகிறது.

 அம்சங்கள்

அம்சங்கள்

புதிய ஜெர்ஸி பஞ்சாப் அணியின் வழக்கமான நிறமான சிகப்பு நிறத்தில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோள்பட்டைகளிலும், ஜெர்சியின் இரு பக்கங்களிலும் கோல்டன் நிறத்தினால கோடுகள் பதியப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப் அணியின் லோகோவான சிங்கமும் ஜெர்ஸியில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த புதிய வடிவமைப்பே பல்வேறு விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது,

 காப்பி

காப்பி

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி பார்ப்பதற்கு கடந்த 2008ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பயன்படுத்திய ஜெர்ஸியை போன்றே உள்ளது. எனவே பழைய ஆர்.சி.பி ஜெர்சியில் லோகோ மற்றும் பெயரை மாற்றிவிட்டு புதிய ஜெர்ஸி என பஞ்சாப் கிங்ஸ் கூறவதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். மேலும் அவர்கள் வடிவமைப்பை திருடிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

 பிரச்சினை

பிரச்சினை

இந்த ஆண்டு ஜெர்ஸி மட்டுமல்லாமல் ஹெல்மெட்டிலும் பஞ்சாப் அணி மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக அவர்கள் சிகப்பு நிறத்தில் ஹெல்மெட் பயன்படுத்திய நிலையில் தற்போது கொல்கத்தா, பெங்களூரு அணியை போல கோல்டன் நிறத்திலான ஹெமெட்டை பயன்படுத்தவுள்ளது. எனவே மற்ற அணிகளை காப்பி அடித்து பஞ்சாப் கிங்ஸ் அணி பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் இருக்கு பஞ்சாப் அணி, இந்தாண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. அதற்கேற்றார் போல் அணியின் பெயரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்பதில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் ஆக மாற்றியது. மேலும், மேக்ஸ்வெல், கருண் நாயர், ஜகதீசன் சுசித், முஜீப் ரகுமான், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட பல வீரர்களை அதிரடியாக கழட்டிவிட்டு பெரிய அளவில் புதிய வீரர்களை அணிக்குள் சேர்த்துள்ளது.

Story first published: Tuesday, March 30, 2021, 23:23 [IST]
Other articles published on Mar 30, 2021
English summary
Fans trolls Punjab Kings for copying RCB’s old jersey for this season in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X