For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்? - விவரம்

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இந்தியா ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்றுவிட்ட நிலையில் கடைசி போட்டி நாளை குயின்ஸ் பார்க்கில் நடைபெறவுள்ளது.

 “இதிலும் வாய்ப்பு இல்லையா?” 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. டிராவிட் முன் உள்ள சவால்! “இதிலும் வாய்ப்பு இல்லையா?” 3வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. டிராவிட் முன் உள்ள சவால்!

டி20 போட்டிகள்

டி20 போட்டிகள்

இந்த தொடர் முடிந்தவுடனே இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளது. 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஓய்வில் இருந்த சீனியர் வீரர்கள் அனைவரும் டி20 தொடரில் பங்குபெறவுள்ளனர். ரோகித் சர்மா தலைமையில் முழு பலத்திலான இந்திய அணி களமிறங்கும். இதற்காக அனைவரும் ட்ரினிடாட் சென்றடைந்தனர்.

கே.எல்.ராகுல் விலகலா?

கே.எல்.ராகுல் விலகலா?

இந்நிலையில் இந்திய அணியில் அனைத்து வீரர்கள் சென்ற போதும், கே.எல்.ராகுல் மட்டும் செல்லவில்லை. பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், பண்ட் உள்ளிட்ட வீரர்களை பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் வரவேற்கிறார். ஆனால் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் வரவில்லை. இதனால் அவர் டி20 தொடரில் இருந்து விலகவுள்ளாரா? என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தொடர் சோதனைகள்

தொடர் சோதனைகள்

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கே.எல்.ராகுல், ஐபிஎல் தொடருக்கு பின் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சமீபத்தில் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சைப் பெற்றார். இதன்பின்னர் முழு உடற்தகுதியுடன் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். எனினும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தற்போது மீண்டும் அவர் அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது.

Recommended Video

IND vs WI தோல்வி குறித்து Nicholas Pooran வேதனை *Cricket
இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் மற்றும் ஆசியக்கோப்பை உள்ளிட்ட தொடர்களில் தான் இந்திய அணி தனது முழு பலத்திலான ப்ளேயிங் 11 பங்கேற்கும். எனவே இதிலும் கே.எல்.ராகுல் பங்கேற்காததால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, July 26, 2022, 20:25 [IST]
Other articles published on Jul 26, 2022
English summary
Is KL Rahul ruled out from India vs west indies t20 series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X