For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வார்னர் வேற இல்லை.. இனி எப்படி ஜெயிப்போம்னு தெரியலையே… இப்பவே புலம்பும் அந்த கேப்டன்

ஹைதராபாத்:வார்னர் இல்லாத போட்டிகளில்தான் இனி, ஹைதராபாத் அணிக்கு உண்மையான சவால் காத்திருக்கிறது என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 48 வது போட்டியில் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதின. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச போவதாக முடிவு செய்து களமிறங்கினார்.

முதலில் ஆடிய ஹைதரபாத் அணி, 20 ஓவர்களில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெடுகள் இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி வீரர் வார்னர் 82 ரன்கள் எடுத்தார்.

ஐபிஎல் தொடருக்கு பை - பை சொன்ன அந்த அதிரடி வீரர்... கடைசியாக பேசியது இதுதான் ஐபிஎல் தொடருக்கு பை - பை சொன்ன அந்த அதிரடி வீரர்... கடைசியாக பேசியது இதுதான்

மளமளவென ரன் குவிப்பு

மளமளவென ரன் குவிப்பு

பவர் பிளே ஓவர்களில் பஞ்சாப் அணி மிக மோசமான பீல்டிங் மற்றும் பந்துவீச்சு செய்ததால், ஹைதராபாத் அணி மளமளவென ரன்களை குவித்தது. முதல் 6 ஓவர்களில் மட்டும் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் அடித்தது ஹைதராபாத் அணி. அங்கிருந்து ஆட்டம் முழுமையாக ஹைதராபாத் அணி பக்கம் திரும்பியது.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு கெயில் (4), மயங்க் அகர்வால் (27), பூரன் (21) போன்ற முன் வரிசை வீரர்கள் அனைவரும் வெளியேற, கே எல் ராகுல் மட்டுமே சற்று ஆறுதல் தரும் விதமாக ஆடினார். மறுமுனையில், கே எல் ராகுலுக்கு யாரும் சப்போர்ட் செய்யவில்லை.

165 ரன்கள்

165 ரன்கள்

மில்லர் (11), அஸ்வின் (0) என ஆட்டமிழக்க, அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார் கே எல் ராகுல். இறுதியில் இவரும் 79 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ப்ளேஆப் சுற்று

ப்ளேஆப் சுற்று

48 ரன்கள் வித்தியாசத்தில் மிகபெரிய வெற்றியை பெற்ற ஹைதராபாத் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு மேலும் பிரகாசமாக ஆனது. மேலும் இந்த போட்டியுடன் விடைபெறும் அதிரடி வீரர் வார்னர், சொந்த நாடு திரும்புகிறார்.

இருவரும் தூண்கள்

இருவரும் தூண்கள்

இந்த வெற்றி குறித்து ஹைதராபாத் கேப்டன் வில்லியம்சன் கூறியதாவது: இந்த தொடர் முழுவதும் ஜானி பெயர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அணிக்கு இரு தூண்களாக திகழ்ந்துள்ளனர். கடைசி போட்டியில் வார்னரின் ஆட்டம் மிக அருமையாக இருந்தது.

நிச்சயம் சவால்

நிச்சயம் சவால்

வார்னர் இல்லாமல் இனி வரும் போட்டிகள் ஹைதராபாத் அணிக்கு மிகவும் சவாலாக இருக்கும். நிச்சயம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று கூறினார்.

Story first published: Tuesday, April 30, 2019, 12:05 [IST]
Other articles published on Apr 30, 2019
English summary
Its very hard to replace warner says sun risers hyderebad captain Kane Williamson.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X