For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜா கடைசி ஓவர்ல நின்னாலே மேட்ச் டை தான்பா.. ஜடேஜாவால் கிடைத்த 2 டை முடிவுகள்

துபாய் : இந்தியா, ஆப்கன் மோதிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று டையில் முடிந்தது.

கடைசி ஓவரில் நின்ற ஜடேஜா, இந்திய அணியின் ஒரே பேட்ஸ்மேன் என்ற நிலையில் நன்றாகவே ஆடினார். எனினும், கடைசியில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து போட்டி டை ஆக காரணமாகவும் இருந்தார்.

நேற்று நடந்தது ஜடேஜவால் கிடைத்த இரண்டாவது டை முடிவு. முதல் டை முடிவு 2014இல் கிடைத்தது. அதை பற்றி பார்ப்போம்.

நியூசிலாந்து போட்டியில்..

நியூசிலாந்து போட்டியில்..

2014இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆக்லாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில், ஜடேஜா கடைசி ஓவரில் ஆடி போட்டியை டை செய்தார். அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 314 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியில் தோனி 50 ரன்கள் அடித்து 36வது ஓவரில் வெளியேற இந்தியா 184 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்து வந்தது.

அஸ்வின், ஜடேஜா கூட்டணி

அஸ்வின், ஜடேஜா கூட்டணி

14 ஓவரில் 130 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அப்போது அஸ்வின், ஜடேஜா இணைந்து 85 ரன்கள் எடுத்தனர். அஸ்வின் வெளியேற ஜடேஜா தனியாளாக அணியை வழிநடத்தி சென்றார். கடைசி ஓவரில் 1 விக்கெட் மட்டுமே கையில் இருக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை.

டை செய்த ஜடேஜா

டை செய்த ஜடேஜா

அப்போது ஜடேஜா இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் அடித்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலைக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அப்போது பந்தை கவர் திசையில் தட்டி விட்ட ஜடேஜா ரன் எடுக்க ஓடினார். மறுபுறம் நின்ற இந்தியாவின் வருண் ஆரோன் இரண்டாவது ரன் ஓடி வந்த நிலையில், ஜடேஜா ஒரு ரன்னோடு நின்று விட்டார். அதனால், போட்டி டை ஆனது. ஒருவேளை அன்று ஜடேஜா இரண்டாவது ரன் ஓடி இருந்தால், ஜடேஜா இந்திய அணியின் ஹீரோவாக உயர்ந்திருப்பார். ஆனால், அப்போது முதல் இணையத்தில் ஜடேஜாவை வைத்து கிரிக்கெட்டை கேலி செய்யும் போக்கு அதிகரித்தது.

ஜடேஜாவின் இரண்டாவது டை

ஜடேஜாவின் இரண்டாவது டை

நேற்றைய போட்டியிலும் ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில், கீழே தட்டி விட்டு ஓடி இருந்தால் கூட எளிதாக வென்று இருக்கலாம். ஆனால், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டாக, போட்டி டை ஆனது. ஜடேஜா கடைசி ஓவரில் நின்றாலே போட்டி டை ஆகிவிடுமோ?

Story first published: Wednesday, September 26, 2018, 19:49 [IST]
Other articles published on Sep 26, 2018
English summary
Jadeja is the reason for 2 Tie matches of India. Here is the first one.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X