For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவருக்கு டீமில் இடம் கொடுக்க மாட்டீங்களா? இவ்ளோ ரன், விக்கெட் எடுத்தது எல்லாம் வேஸ்ட்டா?

மும்பை : ஜலஜ் சக்ஸேனா என்ற இளம் வீரர் ஒருவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும், பல சாதனைகள் செய்தும் இந்திய அணியில் இடம் இல்லாமல் இருக்கிறார்.

ஜலஜ் சக்ஸேனா உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி கபில் தேவ், ரவி சாஸ்திரி, லாலா அமர்நாத் உள்ளிட்ட புகழ் பெற்ற முன்னாள் வீரர்கள் சாதனையை செய்துள்ளார்.

ஆச்சரியம் அடைந்தனர்

ஆச்சரியம் அடைந்தனர்

சமீபத்தில் நடந்த துலீப் ட்ராபி தொடரில் ஜலஜ் சக்ஸேனா செய்த சாதனையை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். ஆனால், அவர் செய்த சாதனையை இந்திய அணியில் இடம் பெற்றவர்கள் மட்டுமே செய்துள்ளனர் என்ற தகவல் மேலும் வியப்பை அளித்தது.

என்ன சாதனை?

என்ன சாதனை?

உள்ளூர் முதல் தர போட்டிகளில் 6,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்கள் வீழ்த்திய 19வது வீரர் என்ற சாதனையை செய்தார் ஜலஜ் சக்ஸேனா. அந்த 19 வீரர்களில் இவருக்கு மட்டுமே இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜாம்பவான்கள் உள்ளனர்

ஜாம்பவான்கள் உள்ளனர்

சக்ஸேனா தவிர்த்து மற்ற 18 இந்திய வீரர்கள் இதே சாதனை செய்து இந்திய அணியிலும் ஆடி உள்ளனர். அவர்களில் கபில் தேவ், லாலா அமர்நாத் உள்ளிட்ட சில ஜாம்பவான்கள் பெயரும் உள்ளது.

18 இந்திய வீரர்கள்

18 இந்திய வீரர்கள்

அவர்கள் - சிகே நாயுடு, லாலா அமர்நாத், விஜய் ஹசாரே, வினு மன்கட், சர்வாடே, பாலி உம்ரிகர், பாபு நட்கர்னி, சாந்து போர்டே, ஜெய் சிம்ஹா, சலீம் துரானி, வெங்கடராகவன், சையது அபித் அலி, மதன் லால், கபில் தேவ், ரவி சாஸ்திரி, மனோஜ் பிரபாகர், சாய்ராஜ் பஹுதுலே மற்றும் சஞ்சய் பங்கர்.

சிறந்த ஆல்-ரவுண்டர் விருது

சிறந்த ஆல்-ரவுண்டர் விருது

இந்த சாதனைப் பட்டியல் மட்டும் இன்றி, கடந்த நான்கு ஆண்டுகளாக ரஞ்சி ட்ராபி தொடரில் சிறந்த ஆல் ரவுண்டர் விருது வாங்கி வருகிறார் ஜலஜ் சக்ஸேனா. அப்படிப் பார்த்தால் உள்ளூர் போட்டிகள் அளவில், இவர் தான் சிறந்த ஆல் ரவுண்டர்.

அணியில் இடம் இல்லை

அணியில் இடம் இல்லை

அப்படிப்பட்டவருக்கு இந்திய அணியில் இதுவரை இடம் இல்லை. ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, விஜய் ஷங்கர் ஆகியோருக்கு கிடைத்த இந்திய அணியின் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.

எத்தனை ரன்கள், விக்கெட்கள்?

எத்தனை ரன்கள், விக்கெட்கள்?

இதுவரை 113 முதல் தர போட்டிகளில் ஆடி உள்ள ஜலஜ் சக்ஸேனா 6,044 ரன்களும், 305 விக்கெட்களும் வீழ்த்தி இருக்கிறார். இவரது பேட்டிங் சராசரி 37. ஒரு ஆல்-ரவுண்டராக இது சிறப்பான செயல்பாடு தான்.

எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

இவரது சாதனை பற்றி அவரிடம் ஊடகங்கள் கேட்ட போது, நான் 300 விக்கெட்கள் வீழ்த்தி விட்டேன் என்பது பற்றி தான் எனக்கு தெரியும். அந்தப் பட்டியலில் நான் மட்டும் தான் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது எனக்கு தெரியாது என்றார்.

இனியும் வாய்ப்பு கிடைக்காது

இனியும் வாய்ப்பு கிடைக்காது

ஜலஜ் சக்ஸேனாவுக்கு இனியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே கருதப்படுகிறது. காரணம், அவருக்கு தற்போது 32 வயது ஆகிறது. இந்திய அணி டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து அணித் தேர்வு செய்து வரும் நிலையில், அவருக்கு வாய்ப்பு குறைவு தான்.

Story first published: Thursday, August 29, 2019, 16:36 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Jalaj Saxena achieved new record without getting chance in Indian team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X