For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'6 பந்துகளில் 6 சிக்ஸர்..' பஞ்சாப் வீரர் மிரட்டல் அடி.. வாய்ப்பு கொடுக்காத பிசிசிஐ-க்கு பதிலடி!

மஸ்கட்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி இந்திய வம்சாவளியை சேர்ந்த வீரர் சாதனை படைத்துள்ளார்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அமெரிக்கா - பாபுவா நியூ கினியா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

Ind vs Eng 5th Test: கொரோனா விட்டாலும் மழை விடாது.. அதிர்ச்சி தரும் வானிலை அறிக்கை..பிட்ச் நிலை என்ன Ind vs Eng 5th Test: கொரோனா விட்டாலும் மழை விடாது.. அதிர்ச்சி தரும் வானிலை அறிக்கை..பிட்ச் நிலை என்ன

முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நடைபெற்றது.

2வது போட்டி

2வது போட்டி

இதில் டாஸ் வென்ற நியூ கினியா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணி, 271/9 ரன்கள் குவித்து அசத்தியது. டார் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறி திணறினர். முதல் 5 விக்கெட்கள் மிக வேகமாக சரிந்த நிலையில் 6ஆவது இடத்தில் களமிறங்கிய ஜாஸ்கரன் மல்கோத்ரா ஒற்றையாளாக போராடினர்.

மல்கோத்ரா அதிரடி ஆட்டம்

மல்கோத்ரா அதிரடி ஆட்டம்

அதிரடியாக விளையாடிய அவர், 124 பந்துகளில் 4 பவுண்டரி, 16 சிக்சருடன் 173 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், முதல் சதமடித்த அமெரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதுமட்டுமல்லாமல் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார். பபுவா நியூ கினியா அணியின் பந்துவீச்சாளர் காடி டோகா வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை

உலக சாதனை

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார். ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டிய 4-வது வீரரும் மல்கோத்ராவே ஆகும்.

இந்திய வம்சாவளி வீரர்

இந்திய வம்சாவளி வீரர்

பஞ்சாப் மாநிலம் சண்டிகாரை சேர்ந்த ஜாஸ்கரன் மல்கோத்ரா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்தவர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்க அணிக்காக விளையாட சென்றுவிட்டார். இவருக்காக தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Story first published: Friday, September 10, 2021, 13:49 [IST]
Other articles published on Sep 10, 2021
English summary
America's Jaskaran Malhotra smashes 6 sixes in an over; joins 6th player in the row
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X