For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீ மும்பைக்கே ஆடு ராசா.. பும்ராவுக்கு எண்ட் கார்ட் போட்ட பசிசிஐ.. வெளியான உடல் தகுதி ரிப்போர்ட்

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா மீண்டும் மீண்டும் காயமடைந்து வருவது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது.

டி20 உலக கோப்பை தொடர்க்கு முன்பு காயம் அடைந்ததால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது இரண்டு மாதத்திற்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியை ஆட்டி படைக்கும் அரசியல்.. கேஎல் ராகுலுக்காக சூர்யகுமார், இஷான் கிஷன் நீக்கம்..அதிர்ச்சி இந்திய அணியை ஆட்டி படைக்கும் அரசியல்.. கேஎல் ராகுலுக்காக சூர்யகுமார், இஷான் கிஷன் நீக்கம்..அதிர்ச்சி

ஏன் அவசியம்

ஏன் அவசியம்

அப்போது பும்ரா பயிற்சி செய்து கொண்டிருந்தபோது முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வலியால் அவதிப்பட்ட பும்ரா இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவின் உடல்நலம் குறித்து அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா விளையாட வேண்டியது அவசியமாக கருதப்படுகிறது.

2 மாதம் இல்லை

2 மாதம் இல்லை

ஏனென்றால் அதில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். இதனால் பும்ரா அந்தத் தொடருக்கு தயாராகி விடுவார் என பிசிசிஐ கருதியது. தற்போது மீண்டும் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த இரண்டு மாதத்திற்கு எந்த போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் முக்கியம்

ஐபிஎல் முக்கியம்

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடரிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடர்களில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர் ஆரம்பித்து விடும் என்பதால் பும்ரா அதில் பங்கேற்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார். பாட் கமிண்ஸ், மிச்செல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக ஐபிஎல் போட்டிகளை விலகிக் கொள்ளும் நிலையில், பும்ரா ஐபிஎல் போட்டிக்காக இந்திய அணி போட்டிகளை தவிர்த்து வருவது ரசிகர்களிடையே விரக்தி அடையச் செய்துள்ளது.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

பும்ராவுக்கு மீண்டும் மீண்டும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அது சரியாகும். ஆனால் இப்போது அறுவை சிகிச்சை செய்தால் 50 ஓர் உலகக் கோப்பை போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் ஆகிவிடும். ஆனால் பும்ராவுக்கு அது கூட முக்கியமல்ல. ஐபிஎல் போட்டி மிஸ் ஆகிட கூடாது. இதனால் பும்ரா ஐபிஎல் தொடரை முடித்துவிட்டு பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்.

Story first published: Wednesday, January 11, 2023, 22:57 [IST]
Other articles published on Jan 11, 2023
English summary
Jasprit bumrah might miss another 2 months according to reports நீ மும்பைக்கே ஆடு ராசா.. பும்ராவுக்கு எண்ட் கார்ட் போட்ட பசிசிஐ.. வெளியான உடல் தகுதி ரிப்போர்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X