For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலிக்கு அரசியல் ஆசை வந்துருச்சு.. பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடிக்கிறார்.. சீண்டும் பாக். வீரர்!

இஸ்லாமாபாத் : இந்தியா, இனி பாகிஸ்தான் நாட்டுடன் எந்த விளையாட்டும் விளையாடக் கூடாது என கங்குலி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் கருத்து கூறியுள்ளார்.

கங்குலிக்கு அரசியல் ஆசை வந்து விட்டது.அதனால் தான் இப்படி பேசுகிறார் எனக் கூறி கடுமையாக விமர்சித்துள்ளார் மியான்தத்.

கங்குலி என்ன பேசினார்?

கங்குலி என்ன பேசினார்?

முன்னதாக கங்குலி காஷ்மீர் தாக்குதலுக்கு பின் மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பை சுட்டிக் காட்டி, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்கக் கூடாது என்றும், கிரிக்கெட் மட்டுமில்லாமல் ஹாக்கி, கால்பந்து என எந்த வித விளையாட்டு ரீதியான தொடர்பும் இனி கூடாது என பேசினார்.

அரசியல் ஆசை இருக்கு

அரசியல் ஆசை இருக்கு

இதை குறிப்பிட்டுப் பேசிய ஜாவேத் மியான்தத், "சௌரவ் வரும் நாட்களில் தேர்தலில் நிற்க விரும்புகிறார் என நினைக்கிறேன். அல்லது அவர் முதல்வராக வர வேண்டும் என விரும்புகிறார். அதனால், தன் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க இப்படி பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்து வருகிறார்" என கூறினார்.

உரிமை உள்ளது

உரிமை உள்ளது

மேலும், "ஐசிசி நிச்சயம் பிசிசிஐ கூறுவதை எல்லாம் கேட்காது. அதன் விதிகளின் படி ஒவ்வொரு உறுப்பு நாடும் தொடர்களில் பங்கேற்கும் உரிமை உள்ளது." என கூறினார் ஜாவேத் மியான்தத்.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

தற்போதைய சூழலில், உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என்பது உறுதியாக தெரியவில்லை. பிசிசிஐ இது தொடர்பாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் மூத்த வீரர் தோனி ஆகியோரிடம் கருத்து கேட்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கங்குலிக்கு அரசியல் ஆசை இருக்கா?

கங்குலிக்கு அரசியல் ஆசை இருக்கா?

ஜாவேத் மியான்தத் கூறுவது போல கங்குலிக்கு அரசியல் ஆசை உள்ளதா? இதற்கு முன்பு, கங்குலி மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

கிரிக்கெட்டில் தான் ஈடுபாடு

கிரிக்கெட்டில் தான் ஈடுபாடு

ஆனால், கங்குலி மேற்கு வங்க மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். மேலும், பிசிசிஐ தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார். அரசியலில் திடீரென குதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, February 22, 2019, 17:34 [IST]
Other articles published on Feb 22, 2019
English summary
Javed Miandad says Ganguly wants to run for elections after he asks for ban
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X