For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாங்க ஓய்வெடுத்தா உங்களுக்கென்ன ஓய்... பாயும் சங்கக்கரா, ஜெயவர்த்தனே

கொழும்பு: எங்களது ஓய்வு குறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ள கருத்துக்கள் எங்களை வேதனை அடைய வைத்துள்ளது. இதை நாங்கள் ரசிக்கவில்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது பாய்ந்துள்ளனர் டுவென்டி 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள குமார சங்கக்கராவும், மஹளா ஜெயவர்த்தனேவும்.

கொழும்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படி தங்களது மனக் குமுறலை அவர்கள் கொட்டினர்.

வங்கதேசத்தில் நடந்த டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெனறு நாடு திரும்பிய அணிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினர் இருவரும். அப்போதுதான் இப்படிப் போட்டுத் தாக்கினர்.

ரொம்ப வருத்தமா இருக்கு

ரொம்ப வருத்தமா இருக்கு

இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், சில அதிகாரிகள் கூறிய கருத்துக்கள் எங்களை வருத்தமடைய வைத்துள்ளது.

மீடியாவில் போய் சொல்லாமா

மீடியாவில் போய் சொல்லாமா

அதுவும் தங்களது கருத்துக்களை மீடியா மூலமாக அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதை நாங்கள் ரசிக்கவில்லை.

ஆச்சரியமாக இருக்கு

ஆச்சரியமாக இருக்கு

வங்கதேசத்தில் என்னிடம் செய்தியாளர்கள், நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்று கேட்டதற்கு, உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பார்க்கலாம் எனறு கூறியிருந்தோம். அதை இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் பெரிய பிரச்சினையாக்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றனர்.

வயசாச்சுல்ல

வயசாச்சுல்ல

சங்க்ககரா கூறுகையில், எனக்கு 37 வயதாகிறது. எனவே அடுத்த உலகக் கோப்பையில் என்னால் ஆட முடியாது. அதை மனதில் கொண்டுதான நான் அப்படிக் கூறினேன் என்றார்.

ஜெயசூர்யா

ஜெயசூர்யா

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைராக உள்ள சனத் ஜெயசூரியாதான் இருவரையும் விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஜெயசூரியா முன்னாள் கேப்டனும் கூட.

Story first published: Wednesday, April 9, 2014, 14:18 [IST]
Other articles published on Apr 9, 2014
English summary
The victory celebrations of new World Twenty20 champions Sri Lanka on Tuesday (April 8) turned sour with veteran players Mahela Jayawardene and Kumar Sangakkara hitting out at officials who had criticised them about their retirements from T20 cricket just before the tournament. Jayawardene and Sangakkara used the occasion to express disappointment at the press conference held at international airport here to accord them a hero's welcome after winning the World T20 title on Sunday in Bangladesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X