ஒரே போட்டியில் 40 சிக்சர்.. கிறிஸ் கெய்லுக்கு போட்டியாக வந்துட்டாருய்யா புது ஆளு!

Posted By:

வாஷிங்டன்: மேற்கு இந்திய தீவுகள் அணியின் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் படைத்திருந்த ஒரு சாதனையை, அமெரிக்காவை சேர்ந்த ஜோஷ் டன்ஸ்டன் முறியடித்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற 'பி' கிரேடு வை கிரிக்கெட்டில் வெஸ்ட் ஆகஸ்டா அணியின் ஜோஷ் டன்ஸ்டன் என்ற வீரர் 40 சிக்சர்கள் விளாசி புது சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள விர்ஜின் மாகாணத்தில் போர்ட் ஆகஸ்டா கிரிக்கெட் சங்கம் சார்பில் 'பி' கிரேடு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வெஸ்ட் ஆகஸ்டா - சென்ட்ரல் ஸ்டிர்லிங் அணிகள் மோதிய போட்டியில் முதலில் வெஸ்ட் ஆகஸ்டா அணி பேட்டிங் செய்தது.

பிற வீரர்ரகள் நடையை கட்டினர்

பிற வீரர்ரகள் நடையை கட்டினர்

அணியின் ஸ்கோர் 10ஆக இருந்தபோது, முதல் விக்கெட் விழுந்ததால், 3வது வீரராக டன்ஸ்டன் களம் இறங்கினார். மறுமுனையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

சிக்சர்கள் பறந்தன

ஆனால், டன்ஸ்டன் சிக்ஸர்களை பறக்கவிட்டார். 35 ஒவர் கொண்ட இந்த போட்டியில் வெஸ்ட் ஆகஸ்டா 354 ரன்கள் சேர்த்தது. டன்ஸ்டன் மட்டும் அதில் 307 ரன்கள் குவித்தார். இதில் 40 சிக்சர்கள் அடங்கும். அணியின் மொத்த ஸ்கோரில் 86.72 சதவீதம் டன்ஸ்டன் அடித்தது. அந்த அணியில் அடுத்தப்படியாக 18 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர்.

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனை

சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனை

ஒருநாள் போட்டியின் மே.இ.தீவுகள் அணியின் பிரபல வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 1984ம் ஆண்டு 189 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார். அப்போட்டியின் மே.இ.தீவுகள் அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது.

புது சாதனை

புது சாதனை

அணியின் ஸ்கோரில் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த ஸ்கோர் 69.48 சதவீதமாகும். இது நாள் வரை இதுதான் சாதனையாக இருந்தது. ஜோஷ் டன்ஸ்டன் தற்போது அதை முறியடித்துள்ளார்.

Story first published: Tuesday, October 17, 2017, 14:31 [IST]
Other articles published on Oct 17, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற