For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவருக்கு மரியாதையே கொடுத்தது இல்லை..அஸ்வின் விஷயத்தில் பகீர் குற்றச்சாட்டு தெரிவித்த முன்னாள் வீரர்

அகமதபாத்: இங்கிலாந்து தொடரில் அசத்தி வரும் அஸ்வினுக்கு உரிய மரியாதை தரவில்லை என முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Recommended Video

இனிமேலாவது Ashwin-க்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் - Sabas Karim

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அஸ்வின் தனது அசத்தல் ஆட்டம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனால் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

இந்நிலையில் அவர் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்றாலும் உரிய மரியாதை அவருக்கு கிடைப்பதில்லை என முன்னாள் வீரர் கரீம் குற்றம்சாட்டியுள்ளார்.

அபாரம்

அபாரம்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆஸ்திரேலியா தொடர் முதல் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் அந்த அணியின் முக்கிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கட்டுப்படுத்தி இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். அதே போல் இங்கிலாந்து தொடரிலும் தன் அபார ஆட்டத்தால் தலை சிறந்த வீரராக புகழப்படுகிறார்.

புதிய மைல்கல்

புதிய மைல்கல்

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி 2 நாட்களில் நடந்து முடிந்தது. இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இதில் உலகில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 77 போட்டிகளில் அஸ்வின் ஆடி 2ம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் உள்ளார். அவர் 72 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

அஸ்வின் குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சாபா கரீம், அஸ்வினுக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரம், பல ஆண்டுகளுக்கு முன்பே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஒன்று. அவருக்கு இனிமேலாவது உரிய மரியாதை தரப்பட வேண்டும். அவர் சிறந்த வீரர் என்பதை நிரூபித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

வருத்தம்

வருத்தம்

ஆசியாவிற்கு வெளியில் அஸ்வின் ஒரு ஓவர் சரியாக வீசவில்லை என்றாலும் உடனே அவர் சில போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு உரிய மரியாதை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர், கடினமாக சூழ்நிலைகளில் உதவக்கூடியவர் என இந்திய அணிக்கு மட்டுமல்ல, முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் புரிந்துள்ளது என சாபா கரீம் தெரிவித்தார்.

அஸ்வின் ரெக்கார்ட்

அஸ்வின் ரெக்கார்ட்

சர்வதேச அளவில் இதுவரை 77 டெஸ்ட், 111 ஒரு நாள், 46 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்வின் மொத்தமாக 603 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்களை எடுத்து 59 ரன்களை விட்டுக்கொடுத்ததே அவரின் சிறந்த பந்துவீச்சாகும். அஸ்வின் இன்னும் 11 விக்கெட்கள் எடுத்தால் டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஹர்பஜனை முந்துவார்.

Story first published: Tuesday, March 2, 2021, 10:28 [IST]
Other articles published on Mar 2, 2021
English summary
Karim Express his happiness for indian all rounder Ashwin is getting the recognition he deserves
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X