For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3-வது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து உச்ச சாதனை படைத்த கருண்நாயர்!

By Veera Kumar

சென்னை: முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்த போட்டியிலேயே முச்சதமும் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் கருண் நாயருக்கு.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த 16-ந் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 477 ரன்களை குவித்தது.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3வது நாள் ஆட்ட நேர இறுதியான நேற்று, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 391 ரன்களை குவித்தது. லோகேஷ் ராகுல் 199 ரன்கள் எடுத்தார். கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

முச்சதம் அடித்த கருண்நாயர்

முச்சதம் அடித்த கருண்நாயர்

இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி அதிரடியைக் காட்டியது. இந்திய அணி வீரர் கருண் நாயர் டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அத்துடன் இதே போட்டியில் இரட்டை சதத்தையும் கடந்து முச்சதத்தையும் (303 ரன்கள்) எட்டி அசத்தினார்.

759 ரன்களில் டிக்ளேர்

759 ரன்களில் டிக்ளேர்

இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 3-வது டெஸ்ட் போட்டியிலேயே முச்சதம் விளாசினார் கருண் நாயர்.

மற்றொரு சாதனை

மற்றொரு சாதனை

இந்திய அணியில் ஷேவாக்குக்கு அடுத்த முச்சதம் விளாசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். அதேபோல் இந்திய வீரர் ஒருவர் தனது முதல் சதம் விளாசிய போட்டியிலேயே இரட்டை சதத்தைக் கடந்தது இது 3வதாகும். முன்பு, திலிப் சர்தேசாய் மற்றும் வினோத் காம்ப்ளி ஆகியோர் தங்களது முதலாவது டெஸ்ட் சதத்தை இரட்டை சதங்களாக மாற்றியவர்களாகும்.

இன்னொரு சாதனை

இன்னொரு சாதனை

கேரளாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் டெஸ்ட்டில் சதம் அடித்தது இதுதான் முதல் முறை. முச்சதம் என்பது அதில் மிகப் பெரிய மைல் கல்லாகும். இச்சாதனையை முறியடிக்க மிக நீண்டகாலமாகும்.

Story first published: Monday, December 19, 2016, 16:56 [IST]
Other articles published on Dec 19, 2016
English summary
Karun Nair now the 3rd Indian after Dilip Sardesai and Vinod Kambli to convert their maiden Test 100 to a double century.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X