For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிகிட்ட வச்சுக்காதீங்க... வாயைக் கொடுத்து வாங்கிக்கொண்ட பீட்டர்சன்

லண்டன் : தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை வம்பிழுத்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை ரசிகர்கள் வறுத்தெடுத்து விட்டனர்.

Recommended Video

ஒட்டுமொத்த கிரிக்கெடிலும் சிறந்த கேப்டன் தோனி தான் - கெவின் பீட்டர்சன்

இந்தியாவிற்கு எதிராக ரன்களை குவிப்பது மிகவும் எளிது என்றும், தன்னுடைய அருசில் பீல்டர் ஒருவரை ஏன் அமர்த்தவில்லை என்றும் டிவிட்டர் மூலம் எம்எஸ் தோனியிடம் பீட்டர்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த ரசிகர்கள், இந்தியாவிற்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 7 முறை டக் அவுட் ஆன வரலாற்றை மறக்க வேண்டாம் என்று அவரை கேலி பேசியுள்ளனர்.

அவர் தான் வேணும்.. யுவராஜ் வேண்டாம்.. 2011 உலகக்கோப்பையில் அடம்பிடித்த தோனி.. வெளியான ஷாக் ரகசியம்!அவர் தான் வேணும்.. யுவராஜ் வேண்டாம்.. 2011 உலகக்கோப்பையில் அடம்பிடித்த தோனி.. வெளியான ஷாக் ரகசியம்!

கொரோனாவால் வீட்டிற்குள் முடக்கம்

கொரோனாவால் வீட்டிற்குள் முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். சமூக வலைதளங்களே நேரத்தை கழிக்க அவர்களுக்கு ஒரே ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்னும் தன்னுடைய வீட்டிற்குள் முடங்கியுள்ளார்.

கோலியுடன் உரையாடிய பீட்டர்சன்

கோலியுடன் உரையாடிய பீட்டர்சன்

இந்நிலையில் வீரர்களின் இந்த ஓய்வுநேரத்தையும் விட்டு வைக்கவில்லை இன்ஸ்டாகிராம். நேரலை மூலம் ஒரு நாட்டை சேர்ந்த வீரரை மற்றொரு நாட்டு வீரருடன் உரையாட வைத்து ரசிர்களை குஷியாக்கி வருகின்றது. இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு கேப்டன் விராட் கோலியுடன் நேரலையில் பீட்டர்சன் உரையாடி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவிடம் ரன் குவிப்பது எளிது

இந்நிலையில், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், முன்னாள் கேப்டன் தோனியை வம்பிழுத்த பீட்டர்சன், இந்தியாவிற்கு எதிராக ரன்களை குவிப்பது மிகவும் எளிது என்றும், தான் பேட்டிங் செய்யும் இடத்திற்கு அருகில் பீல்டர் ஒருவரை ஏன் அமர்த்தவில்லை என்றும் அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் கொதித்தெழுந்துவிட்டனர்.

ரசிகர்கள் பதில்ரசிகர்கள் பதில்

இதனிடையே, இந்தியாவிற்கு எதிராக ஆடிய ஒருநாள் போட்டிகளில் 7 முறை டக்-அவுட் ஆனதை மறக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். மேலும் சும்மா பௌலிங் செய்த விராட் கோலியிடமும் அவுட் ஆனதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் தோனியை வம்பிழுக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Sunday, April 19, 2020, 11:12 [IST]
Other articles published on Apr 19, 2020
English summary
Kevin Pietersen took a cheeky dig at MS Dhoni and Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X