For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் நடந்தே தீரணும்.. இதுதான் என் பிளான்.. துடிக்கும் முன்னாள் வீரர்!

மும்பை : முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் 2020 ஐபிஎல் தொடர் நடந்தே தீர வேண்டும் என கூறி உள்ளார். அதன் மூலம் பொருளாதாரமும் சிறிது மாறும் என அவர் கூறி உள்ளார்.

Recommended Video

IPL 2020 | Kevin Peterson wants IPL to start soon

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்கள் நடைபெறவில்லை.

2020 ஐபிஎல் தொடரும் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்தில் உள்ளது. இந்த நிலையில், பீட்டர்சன் இந்த யோசனையை கூறி உள்ளார்.

ஐபிஎல் நடக்க வேண்டும்

ஐபிஎல் நடக்க வேண்டும்

கெவின் பீட்டர்சன் கூறுகையில், "விரைவில் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் ஐபிஎல் தொடர் நடக்க வேண்டும் என நான் நம்புகிறேன். மேலும், இது தான் கிரிக்கெட் சீசனை துவங்கி வைக்கப் போகிறது எனவும் நான் நினைக்கிறேன்" என கூறி உள்ளார்.

இப்படி நடத்தலாம்

இப்படி நடத்தலாம்

மேலும், "உலகின் ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் ஆட ஆர்வமாக உள்ளனர். ஐபிஎல் அணிகள் மற்றும் பொருளாதாரத்திற்கு பணம் வரும் வகையில் மூன்று இடங்களில், ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானத்தில், மூன்று, நான்கு வாரங்களில் இந்த தொடரை நடத்தலாம்" என அவர் கூறியுள்ளார்.

குறுகிய தொடர்

குறுகிய தொடர்

மூன்று இடங்களில் மிக குறுகிய அளவில் அந்த தொடரை நாம் நடத்தலாம். அதன் மூலம், பாதுகாப்பாக நாம் இருக்க முடியும். இந்த சூழ்நிலையில், ரசிகர்களை நாம் ரிஸ்க் எடுக்க வைக்க முடியாது எனவும் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

தேவையில்லாத ஒன்று

தேவையில்லாத ஒன்று

கெவின் பீட்டர்சன் கூறுவது கிரிக்கெட் வீரரின் பார்வையில், கிரிக்கெட் ரசிகனின் பார்வையில் சரியாக இருந்தாலும், இந்தியாவில் சாமானிய, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பார்வையில் தேவையில்லாத ஒன்றாகவே உள்ளது.

ஊரடங்குக்குப் பின் என்ன?

ஊரடங்குக்குப் பின் என்ன?

மக்கள் பலர் 21 நாட்கள் ஊரடங்குக்குப் பின் என்ன நடக்கும் என்ற பீதியில் உள்ளனர் என்பதே உண்மை. அவர்கள் யாரும் ஐபிஎல் பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை நிலைமை சீரானால் அதன் பின் ஐபிஎல் தொடரை நடத்தலாம்.

Story first published: Saturday, April 4, 2020, 22:12 [IST]
Other articles published on Apr 4, 2020
English summary
Kevin Pietersen want IPL to kickstart soon. He also suggests a plan of conducting it in 3 venues in 3 weeks.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X