For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

KXIP vs DC :அவுட்டாகிட்டே இருப்போம்…. ஆனா…. ரன்ரேட்டை விட்டு தர மாட்டோம்.. இது எப்படி இருக்கு?

சண்டிகர்:ஒவ்வொரு ஐபிஎல் ஆட்டத்திலும் தொடக்க விக்கெட்டுகளை இழந்தாலும் பஞ்சாப் அணியானது, தமது ரன் ரேட்டை அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது.

இந்தியாவில் 2008 முதல் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும், முதல் பகுதியாக மற்ற அணிகளை எதிர்கொண்டு வருகிறது.

வழக்கம் போல நடப்பு சாம்பியன் சென்னை அணி தூள் பண்ணி வருகிறது. அதற்கு அடுத்தபடியாக, சன் ரைசர்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் வேகமாக முன்னேறி வருகிறது.

KXIP vs DC : ஆரம்பமே சொதப்பல்... எங்கிட்டு போய் ரன் அடிக்கிறது..? KXIP vs DC : ஆரம்பமே சொதப்பல்... எங்கிட்டு போய் ரன் அடிக்கிறது..?

புள்ளிகள் இல்லை

புள்ளிகள் இல்லை

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், ராஜஸ்தானும், பெங்களூரும் இனி புள்ளி கணக்கை தொடங்கவே இல்லை. இந்த அணிகள் இதுவரை தாம் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

முதலில் பேட்டிங்

முதலில் பேட்டிங்

இந் நிலையில், சண்டிகரில் பஞ்சாப் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்துள்ளது.

கெய்ல் இல்லாத போட்டி

கெய்ல் இல்லாத போட்டி

பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகரமாக கிறிஸ் கெய்ல் இல்லை, அதே போல் பவுலர் ஆண்ட்ரூ டையும் இல்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அமித் மிஸ்ராவுக்கு பதில் அவேஷ் கான் என்பவரை அணியில் சேர்த்துள்ளது.

வீரர்கள் யார்?

வீரர்கள் யார்?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்: ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்பராஸ் கான், மந்தீப் சிங், சாம் கரன், அஸ்வின், விலோயன், முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், முகமது சமி

அணி விவரம்

அணி விவரம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள்:பிரித்வி ஷா, ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், கொலின் இங்ரம், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், சந்தீப் லாமிச்சான், ரபாடா.

ரன்ரேட் அதிகரிப்பு

ரன்ரேட் அதிகரிப்பு

அணி வீரர்கள் நிலவரம் இப்படி இருக்க... தொடக்க வீரர்கள் பஞ்சாப் அணியில் பெரிதாக நிலைத்து நின்று ஆடவில்லை. ஆனால்... அணியின் ரன்ரேட் மட்டும் குறையவே இல்லை.

ஆட்டத்தில் கவனம்

ஆட்டத்தில் கவனம்

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 4 போட்டிகளை சந்தித்திருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணி முதல் 10 ஓவர்களில் எடுக்கும் ரன்களே தனி ரகம் தான். கிட்டத்தட்ட விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்விகிதம் கீழே செல்லாமல் கவனமாக விளையாடி வருகிறது.

ரன்ரேட் அதிகம்

ரன்ரேட் அதிகம்

முதல் போட்டியில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும், 68 ரன்களை பஞ்சாப் எடுத்திருந்தது. அதேபோல அடுத்த 2 போட்டிகளிலும் 77/3, 83/1 என விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனால்.. ரன்விகிதமோ உச்சத்தில் இருக்கிறது.

10.86% ரன்ரேட்

10.86% ரன்ரேட்

சரியாக சொல்ல வேண்டுமானால்... ஆட்டத்தின் முதல் பாதியில் (10 ஓவர்களில்) ரன்ரேட்டை எத்தருணத்திலும் காம்ப்ரமைஸ் பண்ணாமல் ஆடியிருக்கிறது. குறிப்பாக கடந்த 3 போட்டிகளில் அந்த அணியானது முதல் 10 ஓவர்களில் எடுத்த ரன்ரேட் விகிதம் 10.86 ஆகும். அதாவது ஒரு ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை குவித்துள்ளது எனலாம்.

Story first published: Monday, April 1, 2019, 21:53 [IST]
Other articles published on Apr 1, 2019
English summary
Kings XI Punjab run rate, in this year's ipl season is nearly 10.86%.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X