For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தினேஷ் கார்த்திக்கா வேண்டாம்.. ஹே அவர்தான் எங்க கேப்டன்!.. பல்டி அடித்த கொல்கத்தா ரசிகர்கள்!

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது வட இந்தியர்கள் எல்லோரும் இதற்கு பெரிய வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

By Shyamsundar

பெங்களூர்: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது வட இந்தியர்கள் எல்லோரும் இதற்கு பெரிய வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால் தினேஷ் கார்த்திக்குக்கு எதிராக வடஇந்தியர்கள் சில நாட்களுக்கு முன்பு டிவிட் செய்து இருந்தார்கள். தினேஷ் கார்த்திக் முதல்முறையாக கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டிக்கு பின்பு எல்லோருக்கும் தினேஷ் கார்த்திக் மீது இருந்து கண்ணோட்டம் மொத்தமாக மாறியுள்ளது. கொல்கத்தா ரசிகர்களின் கண்ணோட்டமும் மாறியுள்ளது.

கேப்டன்

கேப்டன்

தினேஷ் கார்த்திக் இதற்கு முன்பு குஜராத் அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது 7.4 கோடி கொடுத்து கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணிக்கு வந்தவுடன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை

துணை

உத்தப்பா துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. உத்தப்பாதான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று கொல்கத்தா ரசிகர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

அன்று

அப்போது எல்லோரும் தினேஷுக்கு எதிராக பேசி டிவிட்டரில் வைரலாக்கினார்கள். இவர் ''இது மிக மிக மோசமான முடிவு. கொல்கத்தா அணிதான் முதலில் வெளியே போக போகிறது. தினேஷ் கார்த்திக் தலைமைக்கு தகுதியானவர் இல்லை'' என்றுள்ளார்.

இப்போது கொண்டாட்டம்

ஆனால் கொல்கத்தா ரசிகர்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறார்கள். எங்களுக்கு சிறந்த கேப்டன் கிடைத்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று இவர் வீடியோ பதிவேற்றியுள்ளார்.

ரசிகன்

இவர் ''அவ்வளவுதான். இந்த முறை நான் கொல்கத்தா ரசிகன். நான் கொல்கத்தா அணிக்கு ஆதரவு தெரிவிக்க போகிறேன்'' என்றுள்ளார்.

தமிழனை புரிஞ்சிக்க லேட் ஆகும்

இவர் ''தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமித்த போது, கொல்கத்தா ரசிகர்கள் எல்லோரும் உத்தப்பா, லைன், நரேன் ஆகியோரை கேப்டனாக நியமிக்கலாம் என்றார்கள். ஆனால் கடைசி போட்டியை பார்த்துவிட்டு இப்போது தினேஷ் கார்த்திக்கை நினைத்து சந்தோசபடுகிறார்கள். எப்போதுமே தமிழனை புரிஞ்சிக்க லேட் ஆகும்'' என்றுள்ளார்.

Story first published: Tuesday, March 20, 2018, 10:18 [IST]
Other articles published on Mar 20, 2018
English summary
Dinesh Karthik named as the KKR captain for IPL 2018.KKR fans are celebrating after Dinesh Karthik named as their captain for IPL 2018.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X