For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷான் அதிரடி... மும்பை பவுலர்களின் நெருக்கடி... கொல்கத்தாவுக்கு மரண அடி!

ஐபிஎல் போட்டிகளில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் போட்டியாக மும்பை மற்றும் கொல்கத்தா இடையேயான போட்டி அமைந்துள்ளது.

Recommended Video

கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றியை தொடருமா மும்பை ?

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் மிகப் பெரிய. வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்று, பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை 40 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 10 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.

தற்போதைய நிலையில், முதலிடத்தைப் பிடிப்பதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு போட்டி உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆர்ஏசி கிடைத்துள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் நான்காவது அணிக்குதான் பலத்த போட்டி உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கே அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டேவில்ஸ் அணிகளும் நம்பிக்கையுடன் உள்ளன.

மோசமான சாதனை

மோசமான சாதனை

இந்த சீசனில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் இரண்டாவது முறையாக விளையாடுகின்றன. இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 21 முறை மோதியுள்ளன. அதில் 17 முறை மும்பை வென்றுள்ளது. கடைசியாக 2015ல் தான் கொல்கத்தா வென்றுள்ளது. ஐபிஎல்லில், ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி என்ற சாதனையை கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை பெற்றுள்ளது.

சமாளிக்குமா கொல்கத்தா

சமாளிக்குமா கொல்கத்தா

கொல்கத்தா 10 புள்ளிகளுடன் உள்ளது. மும்பை 8 புள்ளிகளுடன் உள்ளது. இரு அணிகளுக்கும் அடுத்து விளையாட உள்ள நான்கு ஆட்டங்களுமே மிகவும் முக்கியமாகும். ஒரு தோல்விகூட, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை மாற்றி அமைத்துவிடும் சூழ்நிலை உள்ளது. மேலும் மும்பைக்கு எதிரான தொடர் தோல்விகள் என்ற நிலையை மாற்றி அமைக்க வேண்டிய நிலையிலும் கொல்கத்தா உள்ளது.

இஷானின் இடிமுழக்கம்

இஷானின் இடிமுழக்கம்

கொல்கத்தாவில் நடக்கும் ஆட்டத்தில் டாஸை வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 36, எவின் லூயிஸ், 18, ஹார்திக் பாண்டயா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அணியின் ரன் குவிப்பு மெதுமாக இருந்தபோது களமிறங்கிய இஷான் கிஷண் 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். 21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். போராடி வந்த கேப்டன் ரோஹித் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கொல்கத்தாவுக்கு மரண அடி

கொல்கத்தாவுக்கு மரண அடி

211 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்களுக்கு சுருண்டது. கிறிஸ் லைன், நிதிஷ் ரானா அதிகபட்சமாக தலா 21 ரன்கள் எடுத்தனர். மும்பை பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்கள் சரிந்தன. மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்துக்கு மும்பை முன்னேறியது. கொல்கத்தா 5வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Story first published: Wednesday, May 9, 2018, 23:35 [IST]
Other articles published on May 9, 2018
English summary
KKR to meet MI again in three days. It is time for KKR to break the jinx of more defeats against MI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X