ஐபிஎல்... சிபிஎல்ல ஒரு கை பார்த்தாச்சு... அடுத்ததா அமெரிக்க டி20 லீக் தான்.. ஷாருக் அதிரடி

மும்பை : ஷாருக்கானின் நைட் ரைடர்ஸ் குழுமம் ஐபிஎல் மற்றும் சிபிஎல் தொடர்களில் ஒரு அணியை உரிமை கொண்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் வரும் 2022 முதல் துவங்கப்பட உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரிலும் தற்போது முதலீடு செய்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் ஒரு அங்கமாக மாறியுள்ளது குறித்து கேகேஆர் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இப்படி நடக்குமென்று யாருக்கு தெரியும்.. 2020ல் தோனி - ரெய்னாவை பிரித்த அந்த நாள்.. அதிர்ச்சி சம்பவம்

உரிமையாளர் ஷாருக்

உரிமையாளர் ஷாருக்

இந்திய பிரீமியர் லீக் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் ஒரு அணியை உரிமையாக்கி உள்ளார் பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கான். இவர் மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவரும் இதில் உரிமையாளர்களாக உள்ளனர்.

நைட் ரைடர்ஸ் குழுமம் பங்கேற்பு

நைட் ரைடர்ஸ் குழுமம் பங்கேற்பு

இவர்கள் ஐபிஎல்லில் கேகேஆர் அணியையும் சிபிஎல்லில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியையும் செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தி நைட் ரைடர்ஸ் குழுமம் தற்போது அமெரிக்காவின் டி20 லீக் தொடரிலும் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் வரும் 2022 முதல் செயல்பட உள்ளது.

6 அணிகள் மொத்தமாக முதலீடு

6 அணிகள் மொத்தமாக முதலீடு

மேஜர் லீக் கிரிக்கெட் என்ற எம்எல்சி டி20 தொடரான இதில் 6 அணிகள் இடம்பெறவுள்ளதாகவும் ஐபிஎல் போன்று இல்லாமல் 6 அணிகளும் மொத்தமாக இதில் முதலீடு செய்யும் வகையில் இந்த தொடர் நடைபெறும். முதலீடு செய்யும் 6 அணிகளும் இந்த தொடரின் பங்குதாரர்களாக கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெங்கி மைசூர் மகிழ்ச்சி

வெங்கி மைசூர் மகிழ்ச்சி

இந்த தொடர் குறித்தும் அதில் பங்கேற்றுள்ளது குறித்தும் கேகேஆர் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசதிகளை மேம்படுத்தி அங்கு கிரிக்கெட்டை பெரிய அளவில் கொண்டுவர தாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Knight Riders will become stakeholders in Major League Cricket
Story first published: Tuesday, December 1, 2020, 18:08 [IST]
Other articles published on Dec 1, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X