ஒருத்தராவது 75 ரன் எடுத்திருக்கலாம்ல.. அட போங்கப்பா.. கோஹ்லி விரக்தி

Posted By:

கேப்டவுன்: இந்திய பேட்டிங் மோசமாக இருந்ததே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்விக்கு காரணம் என்று கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கே ஆல்அவுட்டானது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 209 ரன்களும், 2வது இன்னிங்சில் 135 ரன்களும் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், 72 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்

முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்

போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. அவர்கள் என்னதால் அதிரடியை ஆரம்பித்தாலும் 220 ரன்களுக்குள்ளாவது மடக்கியிருந்தால் இந்தியாவுக்கு வெற்றி எளிதானதாக இருந்திருக்கும்.

எல்லா நாளும் பொன் நாளே

எல்லா நாளும் பொன் நாளே

விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக இந்திய அணி வீரர்கள் இழந்தது சரியில்லை. டெஸ்ட் போட்டியின் அனைத்து நாட்களிலுமே நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு திறந்தே இருந்தது. ஏதாவது ஒரு நாளை நாம் முழுமையாக கையகப்படுத்தியிருந்தால் வெற்றி நமக்கு கிடைத்திருக்கும்.

ஒருவராவது அடித்திருக்க வேண்டும்

ஒருவராவது அடித்திருக்க வேண்டும்

இந்திய அணியின் சேஸிங்கின்போது பேட்ஸ்மேன்கள் கை கொடுக்க தவறிவிட்டனர். யாராவது ஒருவர் 75-80 ரன்கள் எடுத்திருந்தாலும் வெற்றிக்கு வாய்ப்பு இருந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு பெருமை சேர வேண்டும். அவர்கள் அணியில் ஒரு பவுலருக்கு காயம் ஏற்பட்டு வெளியேறிவிட்டார். இருப்பினும் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றனர்.

மன வலிமை உள்ளது

மன வலிமை உள்ளது

பார்ட்னர்ஷிப்புகளை உருவாக்குவதில்தான் டெஸ்ட் போட்டியின் வெற்றி அடங்கியுள்ளது. நாம் அதில் கோட்டை விட்டோம். நம்மைவிட தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனக்ள் அதை சிறப்பாக செய்தனர். வெளிநாடுகளில், சவாலான மைதானங்களில் ஆடும்பபோது மனவலிமை முக்கியமானது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மனவலிமை பாராட்டுக்குரியதாகவே இருந்தது. இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Tuesday, January 9, 2018, 10:59 [IST]
Other articles published on Jan 9, 2018
Please Wait while comments are loading...