மக்கள் நல்லா இருக்கனும்.. இனி அந்த விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்.. கொந்தளிக்கும் கோஹ்லி!

Posted By:

டெல்லி: இனி குளிர்பான விளம்பரப்படங்களில் எதிலும் எதிர்காலத்தில் நடிக்க மாட்டேன் என திடீர் முடிவை அறிவித்துள்ளார் கோஹ்லி.

மக்களுக்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்க விரும்புகிறேன். மக்கள் என்னை பின்பற்றுகிறார்கள் அவர்களுக்கு நல்லவனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

அதேபோல் அவர் தான் பயன்படுத்தாத எந்த ஒரு பொருளின் விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 உலகின் நம்பர் ஒன் கேப்டன்

உலகின் நம்பர் ஒன் கேப்டன்

இந்திய அணி தற்போது அனைத்து விதமான ஆட்டங்களிலும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணிதான் தற்போது உலகிலேயே மிகச்சிறந்த அணியாக இருக்கிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல் நீண்ட நாட்களாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணிதான் முதல் இடத்தில் இருக்கிறது. உலகிலேயே இப்படி இந்தியாவை பல சாதனை புரிய வைத்திருக்கிறார் கோஹ்லி. மேலும் இப்போது கோஹ்லிதான் உலகிலேயே சிறந்த கேப்டன் என பலர் கருத்து வருகின்றனர்.

 கோஹ்லியின் குணம்

கோஹ்லியின் குணம்

உலகின் முதல்நிலை கேப்டனாக இருக்கும் கோஹ்லிக்கு பல சிறந்த குணங்கள் இருக்கின்றது. அனுஸ்கா சர்மாவை பலர் டிவிட்டரில் தாக்கிய பேசிய போது, அவர் அனுஸ்கா சர்மாவை விட்டு பிரிந்திருந்தாலும் கூட சாதகமா, அன்பாக டிவிட்டரில் நிறைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது பெண்கள் மத்தியில் அவருக்கு பெரும் மதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல இந்திய ராணுவ வீரர்களுடன் ஒருநாளைக் கழித்தது, பள்ளி சிறுவனைக் கொடுமைப்படுத்திய அம்மாவிற்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியது என நிறைய வித்தியாசமான செயல்களை செய்திருக்கிறார்.

 விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்

விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்

தற்போது அது போல் அவர் மற்றொரு வித்தியாசமான முடிவையும் எடுத்துள்ளார். இனி முதல் அவர் பயன்படுத்தாத இந்தப் பொருட்களின் விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் குளிர்பான விளம்பரங்கள் எதிலுமே இனி நடிக்கப் போவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளார். மற்ற மக்களுக்கும், சிறுவர்களுக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த முடிவே கடைசி வரை தொடரும்

இந்த முடிவே கடைசி வரை தொடரும்

மேலும் ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடும் போது விளம்பரங்களில் நடிக்க வேண்டி இருக்குமே என்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர்களிடம் பதிலளித்த கோஹ்லி ''இந்த முடிவே இறுதியானது, ஐபிஎல்லில் சில வெளிநாட்டு வீரர்கள் சில முக்கிய விளம்பரங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து அதைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதை போலவே நானும் இந்த முடிவில் கடைசி வரை உறுதியாக தொடர்வேன். நான் பயன்படுத்தாத எதையும் மக்கள் மீது திணிக்க மாட்டேன்" என்றார்.

Story first published: Wednesday, October 11, 2017, 13:48 [IST]
Other articles published on Oct 11, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற