For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர்ந்து 11 ஆண்டுகள் சதம்... கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு... மிஸ் ஆன செஞ்சுரி!

கேன்பெரா : கடந்த 2008க்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்காமல் விராட் கோலிக்கு இந்த 2020 ஆண்டு முடிந்துள்ளது.

கடந்த 2009 முதல் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் சதமடிக்காமல் விராட் கோலி இருந்ததில்லை.

இந்த ஆண்டு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஒருநாள் போட்டித் தொடர்கள் அதிகமாக நடைபெறாத நிலையில், விராட்டிற்கு சதமில்லாத ஆண்டாக 2020 முடிவடைந்துள்ளது.

அந்த தவறு.. சீனியர் வீரரால் சிக்கிய டீம்.. காப்பாற்றிய கோலி!அந்த தவறு.. சீனியர் வீரரால் சிக்கிய டீம்.. காப்பாற்றிய கோலி!

சதமடிக்காத 2008 ஆண்டு

சதமடிக்காத 2008 ஆண்டு

கடந்த 2008 முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார் கேப்டன் விராட் கோலி. கடந்த 2008 ஆகஸ்ட் 18ம் தேதி இலங்கைக்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியை கோலி விளையாடினார். அந்த ஆண்டு அவர் இந்திய அணிக்காக சதம் எதையும் எடுக்கவில்லை.

சதமடிக்காமல் கழிந்த ஆண்டு

சதமடிக்காமல் கழிந்த ஆண்டு

2008க்கு பிறகு சதமடிக்காமல் விராட் கோலி இருந்ததில்லை. 2009 முதல் தொடர்ந்து 11 ஆண்டுகள் அவர் சதமடிக்காத ஆண்டே இல்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அவருக்கு ஒருநாள் போட்டிகளில் சதமடிக்காமல் முடிந்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று அவர் ஆடிய இந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் அவர் சதமடிக்கவில்லை.

முறியடிக்காத கோலி

முறியடிக்காத கோலி

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து 19 ஆண்டுகள் சதமடித்து சாதனை புரிந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இன்றைய இறுதி ஒருநாள் போட்டியில் விராட் சதமடித்து அதை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் 63 ரன்களை மட்டுமே இன்றைய போட்டியில் எடுக்க முடிந்துள்ளது.

2019ல் 5 சதம்

2019ல் 5 சதம்

கடந்த 2009ல் ஒருநாள் போட்டிகளில் 1 சதம் எடுத்து தன்னுடைய கணக்கை துவக்கி வைத்தார் விராட் கோலி. கடந்த ஆண்டு 2019ல் அது 5 சதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகள் 43 சதங்கள்

11 ஆண்டுகள் 43 சதங்கள்

கடந்த 2008ல் அணியில் தன்னுடைய அறிமுக ஆண்டில் சதமடிக்காமல் இருந்த விராட் கோலி, கடந்த ஆண்டுவரை தொடாந்து 11 ஆண்டுகள் சதமடித்து 11,450 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கால கட்டத்திலி 43 சதங்களை 60.58 சராசரியில் அவர் அடித்துள்ளார்.

Story first published: Wednesday, December 2, 2020, 12:57 [IST]
Other articles published on Dec 2, 2020
English summary
From his debut till date Virat Kohli has only 2 calendar years without scoring an ODI century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X