நீண்ட இழுபறிக்கு பிறகு சாதித்த புதுமாப்பிள்ளை கோஹ்லி

Posted By: Staff

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒரு சாதனையை, கேப்டன் விராட் கோஹ்லி சமன் செய்தார்.

மூன்று டெஸ்ட்கள், ஆறு ஒருதினப் போட்டிகள், மூன்று டி–20 போட்டிகளில் விளையாட, தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது இந்திய கிரிக்கெட்அணி. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி, கடைசி டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெற்றது.

Kohli equals Ganguly

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றி என்ற இந்திய சாதனையில் இரண்டாம் இடத்தில் உள்ள சவுரங் கங்குலியின் இடத்தை விராட் கோஹ்லி சமன் செய்தார்.

கேப்டனாக அதிக டெஸ்ட் வெற்றி என்ற பெருமை, கேப்டன் கூல், மகேந்திர சிங் டோணிக்கு உள்ளது. அவர், 60 போட்டிகளில், 27 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

சவுரவ் கங்குலி கேப்டனாக 49 போட்டிகளில், 21 வெற்றிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி 35 போட்டிகளில், 21 வெற்றி பெற்று கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.


Story first published: Monday, January 29, 2018, 11:12 [IST]
Other articles published on Jan 29, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற