ஸ்மிருதியின் சாதனையை ஒன்றுமில்லாமல் செய்தார் கோஹ்லியின் முன்னாள் காதலி!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

மும்பை: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த டி-20 ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா, அதிவிரைவு அரை சதம் அடித்து சாதனை புரிந்தார். அந்த சாதனையை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லியின் முன்னாள் காதலி ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி-20 போட்டித் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின.

இதில் முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில், 4 விக்கெட் இழப்புக்கு, 198 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ் அரைசதம் அடித்தனர். இதில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனையைப் புரிந்தார். மகளிர் டி-20 போட்டியில் மிக விரைவாக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்று சில நாட்களுக்கு முன் செய்த சொந்த சாதனையை அவர் முறியடித்தார்.

25 பந்துகளில் அரை சதம்

25 பந்துகளில் அரை சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சில நாட்களுக்கு முன் நடந்த போட்டியில், 30 பந்துகளில் அரை சதம் அடித்தார் ஸ்மிருதி. நேற்றைய ஆட்டத்தில், 25 பந்துகளில் அரை சதம் அடித்து சொந்த சாதனையை முறியடித்தார். இதர்கு முன், மிதாலி ராஜ் 36 பந்துகளில் அரை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

வேகமான அரைசதத்தில் சாதனை

வேகமான அரைசதத்தில் சாதனை

இதன் மூலம், மிக வேகமாக அரை சதம் எடுத்த வீராங்கனைகளில் மூன்றாவது இடத்தில் ஸ்மிருதி உள்ளார். அவர் 40 பந்துகளில், 12 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன், 76 ரன்கள் எடுத்தார்.

சாதனையுடன் சதம்

சாதனையுடன் சதம்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி, 199 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம், டி-20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாதனையை அந்த அணி முறியடித்தது. அந்த அணியின் டேனியேல் வயாட், 52 பந்துகளில் சதமடித்து, அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இரண்டாவது சதம் அடித்தார்

இரண்டாவது சதம் அடித்தார்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை, என்னை திருமணம் செய்த தயாரா என்று கேட்டு அசத்தியவர் வயாட். அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன், வெஸ்ட் இன்டீஸ் அணியின் டியான்ட்ரா டோடின் மட்டுமே இரண்டு சதம் அடித்துள்ளார். இதுவரை, மகளிர் டி-20 போட்டிகளில் ஏழு முறை மட்டுமே சதம் அடிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Smriti Mandhana’s record goes in vain
Story first published: Monday, March 26, 2018, 14:45 [IST]
Other articles published on Mar 26, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற