For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியின் இந்த டெஸ்ட் எப்போது முடியும்!

By Staff

டெல்லி: தொடர்ந்து, 9 டெஸ்ட் தொடர்களில் வெற்றி, ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்தது என, இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல சாதனைகள் படைத்துள்ளன. அந்த வகையில் வித்தியாசமான சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் திணறி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட்களில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது நடந்து வரும் மூன்றாவது டெஸ்டிலும் சொதப்பி வருகிறது.

Kohli still in testing mode


இந்தத் தொடருக்கு முன்பாக, தொடர்ந்து, 9 டெஸ்ட் தொடர்களில் வெற்றி, ஐசிசி தரவரிசையில் முதலிடம் என, இந்திய அணி கோலாச்சியது. குறிப்பாக கேப்டன் விராட் கோஹ்லி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, 34 டெஸ்ட் போட்டிகளில், 20ல் வெற்றி, 9ல் டிரா, 5ல் மட்டுமே தோல்வி என அணியின் வெற்றிக் கொடி உயரப் பறந்தது.

ஆனால், விராட் கோஹ்லி தலைமையில் இதுவரை நடந்துள்ள 35 டெஸ்ட் போட்டிகளிலும் 35 அணியுடன் இந்தியா களமிறங்கியது. 35 போட்டிகளில் ஒருமுறை கூட, ஒரே அணி இரண்டு டெஸ்ட்களில் விளையாடியது கிடையாது.

இதுவரை, 28 வீரர்கள் விளையாடியுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே, 33 போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 பேர் அறிமுகமாகியுள்ளனர். கோஹ்லியின் இந்தப் பரிசோதனை எப்போது முடியும்.
Story first published: Thursday, January 25, 2018, 22:55 [IST]
Other articles published on Jan 25, 2018
English summary
India played with 35 different teams in 35 tests
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X