For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த வீரர் மட்டும் விலக வேண்டும்... ஹர்திக் பாண்ட்யா வர வேண்டும்...3வது டெஸ்டுக்கு கவாஸ்கர் வியூகம்

அகமதாபாத்: இங்கிலாந்துடனான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் வேண்டாம் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4 போடிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என சமநிலையில் உள்ளது. 3வது போட்டி வரும் பிப்ரவரி 24ம் தேதி தொடங்குகிறது.

6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்! 6 ரன்கள்தான்... பெவிலியனுக்கு திரும்பிய கேப்டன்... அறிமுக போட்டியில் அக்சர் அபாரம்!

இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியில் செய்யவேண்டிய முக்கிய மாற்றங்கள் குறித்து சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

3வது டெஸ்ட்

3வது டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் தொடர் அகமதாபாத்தில் உள்ள மோத்திரா மைதானத்தில் நடக்கவுள்ளது. சமீபத்தில் மறுசீரமைக்கப்பட்ட இந்த மைதானம் உலகின் மிகப்பெரும் கிரிகெட் மைதானமாகும். இங்கு 3வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

பரபரப்பு

பரபரப்பு

இங்கிலாந்து அணி 3வது டெஸ்டில் தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறும். அதே சமயம் 2வது டெஸ்டில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்க வேண்டிய கட்டாயத்திலும் இங்கிலாந்து உள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டி போராடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

குல்தீப் வேண்டாம்

குல்தீப் வேண்டாம்

3வது டெஸ்டில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். அவர், அகமதாபாத் மைதானத்தில் 3 வேகப்பந்து வீச்சாளார்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். குறிப்பாக குல்தீப் யாதவ் வெளியேறி கொண்டால் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோரின் கூட்டணியை பார்க்கலாம்.

பாண்ட்யா வருவாரா..

பாண்ட்யா வருவாரா..

பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே ஹர்திக் பாண்டியா ஒரு வேளை காயத்தில் இருந்து மீண்டிருந்தால் இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிக உதவியாக இருப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 17, 2021, 17:33 [IST]
Other articles published on Feb 17, 2021
English summary
Kuldeep Yadav out in 3rd Test? Sunil Gavaskar predicts changes in Team India
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X