For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெல்போர்னுக்கு போயிட்டோமுங்கோ... ஜடேஜா, குல்தீப் கூல் செல்பி!

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டி நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் 26ம் தேதி இரண்டாவது போட்டி நடைபெறவுள்ளது.

முதல் போட்டியில் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

மொத்தமாக முடக்கி போட்ட எலும்பு முறிவு.. 2 மாதத்திற்கு எதுவும் செய்ய முடியாது.இந்திய பவுலருக்கு செக் மொத்தமாக முடக்கி போட்ட எலும்பு முறிவு.. 2 மாதத்திற்கு எதுவும் செய்ய முடியாது.இந்திய பவுலருக்கு செக்

இந்நிலையில் கேப்டன் கோலி இல்லாத இந்திய அணி மெல்போர்னிற்கு சென்றுள்ளது. ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் தங்களது பயணத்தின்போது செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியுடன் கூடிய 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 17ம் தேதி துவங்கியது. முதலில் நடைபெற்ற பகலிரவு போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து பார்டர் -கவாஸ்கர் கோப்பைக்கான இரண்டாவது போட்டி வரும் 26ம் தேதி துவங்கவுள்ளது.

வீரர்களை ஊக்குவித்த கேப்டன்

வீரர்களை ஊக்குவித்த கேப்டன்

கேப்டன் விராட் கோலி பகலிரவு போட்டியில் பங்கேற்றுவிட்டு தன்னுடைய குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பியுள்ளார். நேற்றைய தினம் அவர் தனது பயணத்தை துவக்கினார். முன்னதாக ரஹானே தலைமையில் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று அவர் வீரர்களை ஊக்குவித்தார்.

ஜடேஜா, குல்தீப் பயணம்

ஜடேஜா, குல்தீப் பயணம்

இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியினர் மெல்போர்ன் சென்றடைந்துள்ளனர். கடந்த பகலிரவு போட்டியில் காயம் காரணமாக இடம்பெறாத ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். அவர்களும் தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.

இன்ஸ்டாகிராமில் பதிவு

இன்ஸ்டாகிராமில் பதிவு

இதனிடையே, தங்களது பயணத்தின்போது, ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் செல்பி எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டனர். ஜடேஜா தன்னுடைய பதிவில் நெக்ஸ்ட் ஸ்டாப் மெல்போர்ன் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை துவங்கவுள்ள இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி கொள்வதன்மூலம் தொடரை 1க்கு ஒன்று என சமன்படுத்த இந்தியா தீவிரம் காட்டி வருகறது.

Story first published: Wednesday, December 23, 2020, 11:19 [IST]
Other articles published on Dec 23, 2020
English summary
Skipper Virat Kohli has left for India, the rest of the team landed in Melbourne
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X