For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 விக்கெட் விழுந்தவுடன்.. 'பாத்ரூம்'-ல ஒளிஞ்சிக்கிட்டேன் - 'தொடைநடுங்கிய' ஜேமிசன்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பரபரப்பான நிமிடங்களால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக பாத்ரூமில் சென்று டென்ஷனை குறைத்திருக்கிறார் கைலே ஜேமிசன்.

கடந்த வாரம் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நியூசிலாந்து.

ஒரு இன்ச் கூட அதிகமாகாது.. ஒலிம்பிக் பதக்கத்தில் மறைந்திருக்கும் ரகசியம்.. இதுதான் தயாரிக்கும் முறை ஒரு இன்ச் கூட அதிகமாகாது.. ஒலிம்பிக் பதக்கத்தில் மறைந்திருக்கும் ரகசியம்.. இதுதான் தயாரிக்கும் முறை

இரண்டு அணிகளுக்கும் பொதுவான இடம் என்பதால், எப்படியும் இந்தியா கடும் சவால் அளிக்கும் என்று எதிர்பார்த்தால், கப்சிப் என சரண்டரானது கோலி படை.

நியூசி சபாஷ்

நியூசி சபாஷ்

ரோஹித் ஷர்மா, கில், புஜாரா, கோலி, ரிஷப் பண்ட் என்று அதிகம் எதிர்பார்த்த பேட்ஸ்மேன்ஸ் அனைவரும், சவுத்தாம்ப்டன் பிட்சில் எந்தவித போராட்டமும் இன்றி வெளியேறினார்கள். பவுலிங்கில் ஷமி, அஷ்வின் தவிர திருப்தி கொள்ளும் அளவுக்கு யாரும் செயல்படவில்லை. குறிப்பிட்டு ஒருவரை மட்டும் சொல்லவேண்டுமெனில், ரிஷப் பண்ட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கும் முன்பு, கவாஸ்கர் முதல் சடகோபன் ரமேஷ் அவரை அனைவரது 'X-Factor' பிளேயர் சாய்ஸாக இருந்தது ரிஷப் தான். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 40+ ரன்கள் வரை தட்டி தட்டி தப்பிப் பிழைத்து நின்றதைத் தவிர அவரால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை.

சோக புலம்பல்ஸ்

சோக புலம்பல்ஸ்

அதேசமயம், நியூசிலாந்தின் யாரும் எதிர்பார்க்காத 'X-Factor' வீரராக இருந்தவர் கைலே ஜேமிசன். மொத்தம் 7 விக்கெட்டுகள். முதல் இன்னிங்ஸில் 5 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் என இந்தியாவை இரு இன்னிங்ஸிலும் நிலை குலைய வைத்தவர் ஜேமிசன் தான். 6 அடி எட்டு அங்குலத்துடன் ஆஜானுபாகுவாக தெரிந்த ஜேமிசன், விக்கெட்டுகளை அள்ள இந்திய ரசிகர்கள் மிரண்டு போனார்கள். (ஐபிஎல்-ல RCB டீம்ல இவ்வளவு ஃபோர்ஸா இல்லையப்பா!!) என்ற சோக புலம்பல்களையும் கேட்க முடிந்தது.

நடுக்கம்

நடுக்கம்

ஆனால், அவரோ மேட்ச் பிரஷரை தாங்க முடியாமல், பாத்ரூமில் சென்று தாழிட்டுக் கொண்ட கூத்தெல்லாம் அடித்திருக்கிறார். இப்போது தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் வெளியே வந்திருக்கிறது. இதுகுறித்து ஜேமிசன் அளித்த பேட்டியில், "நாங்கள் இறுதி நாளில் சேஸிங் செய்த போது, எங்களது இரு ஓப்பனர்ஸ் அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் பதட்டமடைந்த எனக்கு நடுக்கமே ஏற்பட்டுவிட்டது. இதனால், அதிலிருந்து மீள பாத்ரூமுக்கு செல்ல முயற்சி செய்தேன்.

ஒவ்வொரு பந்துக்கும்

ஒவ்வொரு பந்துக்கும்

எனினும் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் எங்கள் பதட்டத்தை அமைதிப்படுத்தி, அவர்கள் வேலையை கச்சிதமாக செய்து முடித்தனர். இது தான் 'டெஸ்ட் கிரிக்கெட்டின் கடினமான காலம்'. நாங்கள் உள்ளே உட்கார்ந்து உண்மையில் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால், ஒவ்வொரு பந்துக்கும் இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நான் கூட விக்கெட் விழுந்துவிட்டதோ என்று நினைத்தால், கடைசியில் அங்கு சிங்கிள் ரன் தான் எடுத்திருப்பார்கள். இந்த பதட்டத்தை தணிக்கவே நான் பாத்ரூம் சென்றுவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

Story first published: Tuesday, June 29, 2021, 16:57 [IST]
Other articles published on Jun 29, 2021
English summary
kyle Jamieson reveals he Went bathroom WTC final - ஜேமிசன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X