For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுனாமி, வெள்ளம்.. எல்லாத்தையும் பார்த்துட்டோம்.. எங்களை இதுக்குன்னே டிசைன் பண்ணிருக்காங்க - பாலாஜி!

சென்னை : கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மிபதி பாலாஜி நம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை பேசி உள்ளார்.

Recommended Video

சுனாமி, வெள்ளம் எல்லாத்தையும் பாத்துட்டோம்... இதையும் எதிர்கொள்வோம் - பாலாஜி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் உள்ளது.

மக்கள் பதற்றமாக இருக்கும் இந்த நேரத்தில், பாலாஜி சுனாமி, வெள்ளம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி, நம்பிக்கை ஊட்டி உள்ளார்.

லக்ஷ்மிபதி பாலாஜி

லக்ஷ்மிபதி பாலாஜி

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2002இல் அறிமுகம் ஆனார் லக்ஷ்மிபதி பாலாஜி. ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளில் 71 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடி உள்ளார்.

கொரோனா பேட்டி

கொரோனா பேட்டி

73 ஐபிஎல் போட்டிகளில் 76 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.

அந்த சந்தேகம்

அந்த சந்தேகம்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா தற்போது 21 நாட்கள் லாக்டவுனில் உள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதன் முடிவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வருமா? அல்லது இந்த நிலை தொடருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.

போராடும் ஆற்றல்

போராடும் ஆற்றல்

இது பற்றி பேசிய லக்ஷ்மிபதி பாலாஜி, "நாம் பிழைத்து இருக்கவே வடிவமைக்கப்பட்டவர்கள். நம் முன்னோர்கள் வியாதிகளை எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்று இருந்தனர். நம் பெற்றோர் மோசமான நேரங்களை கடந்து வந்துள்ளனர்" என நேர்மறையாக பேசினார்.

சுனாமி, வெள்ளம்

சுனாமி, வெள்ளம்

"நாம் கூட மோசமான நேரங்களை கடந்துள்ளோம். 2004 சுனாமி, சென்னை வெள்ளம் ஆகியவை அவற்றில் சில. மக்கள் ஒற்றுமையாக இணைகிறார்கள். நாடுகள் தங்கள் இடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்கிறார்கள்" என்றார்.

மருத்துவர் பேச்சை கேட்கணும்

மருத்துவர் பேச்சை கேட்கணும்

"இந்த நேரத்தை நாம் மதிக்க வேண்டும். இந்த நாளை எப்படி கடக்கப் போகிறோம் என்றால் அது கடினமாக இருக்கும். ஆனால், நிதர்சனம் என்ன என்பதை புரிந்து கொண்டு, சுய ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். லேசான காய்ச்சல் இருந்தாலும் நாம் மருத்துவர் சொல்வதை கேட்க வேண்டும்" என்றார்.

பின்பற்ற வேண்டும்

பின்பற்ற வேண்டும்

"இது உலகம் முழுவதும் உடல்நலம் மோசமாக இருக்கும் நேரம். நாம் நம் சுகாதாரத் துறை அதிகாரிகள் சொல்வதை கேட்க வேண்டும். அரசு முன்னே வந்து, நல்ல யோசனைகளுடன் தன் வேலையை செய்கிறது. நாம் அதை பின்பற்ற வேண்டும்" என்றும் கூறினார் லக்ஷ்மிபதி பாலாஜி.

Story first published: Sunday, March 29, 2020, 19:46 [IST]
Other articles published on Mar 29, 2020
English summary
Lakshmipathy Balaji talk positive ahead of tough time with coronavirus threat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X