For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார்க்கர்.. ஸ்லோ பால்.. எப்படி பண்றாருன்னே தெரியலை.. இந்திய பவுலரை புகழ்ந்து தள்ளிய மலிங்கா!

மும்பை : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவை புகழ்ந்து தள்ளினார் இலங்கை அணியின் மூத்த வீரர் மலிங்கா.

மலிங்கா, பும்ரா இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலமாக ஒன்றாக ஆடி வருகிறார்கள்.

பும்ரா தன் இளம் வயதில் மலிங்காவின் அறிவுரைகள் பலவற்றை கேட்டு தான் தன் திறன்களை வளர்த்துக் கொண்டார். இந்த நிலையில், பும்ராவின் வளர்ச்சியை பார்த்து பெருமைப்பட்டு, அவரை புகழ்ந்தார் மலிங்கா.

பும்ரா வருகை

பும்ரா வருகை

2013ஆம் ஆண்டு முதல் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று வருகிறார். அப்போது பத்தோடு, பதினொன்றாக இருந்தார் பும்ரா. அவரது தனித்துவமான பந்துவீசி ஸ்டைல், மலிங்காவை ஈர்த்தது.

தனித்துவமான பந்துவீச்சு

தனித்துவமான பந்துவீச்சு

அதே போல, மலிங்காவும் மற்ற புகழ்பெற்ற வேகப் பந்துவீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமான பந்துவீச்சை கொண்டவர். அவர் பும்ராவுக்கு சில ஆலோசனைகளை ஐபிஎல் தொடர்களின் போது வழங்கி வந்தார்.

தனித்துவமான பந்துவீச்சு

தனித்துவமான பந்துவீச்சு

அதே போல, மலிங்காவும் மற்ற புகழ்பெற்ற வேகப் பந்துவீச்சாளர்களை காட்டிலும் தனித்துவமான பந்துவீச்சை கொண்டவர். அவர் பும்ராவுக்கு சில ஆலோசனைகளை ஐபிஎல் தொடர்களின் போது வழங்கி வந்தார்.

யார்க்கர் மன்னன்

யார்க்கர் மன்னன்

தன்னை வேகமாக வளர்த்துக் கொண்ட பும்ரா, யார்க்கர் மன்னன் என பெயர் பெறும் அளவிற்கு இன்று உலக அளவில் வேகப் பந்துவீச்சில் முதல் இடத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் மலிங்கா, பும்ரா குறித்து பேசினார்.

பெருமைப்பட்ட மலிங்கா

பெருமைப்பட்ட மலிங்கா

"நான் சர்வதேச கிரிக்கெட் ஆடிய போதே ஒருவருக்கு உதவி செய்ய முடிந்ததும், அவர் இன்று நம்பர் 1 பந்துவீச்சாளராக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று பும்ரா குறித்து பெருமைப்பட்டார் மலிங்கா.

மகிழ்ச்சியான விஷயம்

மகிழ்ச்சியான விஷயம்

"அவரது கிரிக்கெட் வாழ்வில் என்னை அடையாளம் காணும் அளவுக்கு அவருக்கு நான் ஆலோசனைகள் வழங்கி உள்ளேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஒவ்வொருவரும் இளம் வீரர்களுக்கு தங்கள் அனுபவத்தையும், திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன். அதன் மூலம் கிரிக்கெட் வெற்றி பெறும்" என்றார் மலிங்கா.

அதிக விஷயங்கள்

அதிக விஷயங்கள்

"ஜஸ்பிரீத் என்னைக் காட்டிலும் பந்துவீச்சில் அதிக விஷயங்களை வைத்துள்ளார். அவரது மூளை, அனைத்து ஆலோசனைகளையும் சேகரித்து, வேலை செய்யும் திறன் கொண்டது" என்று பும்ராவை பாராட்டினார் மலிங்கா

நம்பவே முடியாத ஒன்று

நம்பவே முடியாத ஒன்று

மேலும், "அவர் எப்படி யார்க்கர் பந்துகளையும், ஸ்லோ பந்துகளையும் வீசுகிறார் என்பதே அதற்கு உதாரணம். அவர் அதை எப்படி செய்கிறார் என்பது நம்பவே முடியாத ஒன்று. அவர் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற பசியில் இருக்கிறார்" என புகழ்ந்து தள்ளினார் மலிங்கா.

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல்

2020 ஐபிஎல் தொடரில் பும்ரா, மலிங்கா இருவரும் மீண்டும் இணைந்து விளையாட உள்ளனர். கடந்த சீசனில் மும்பை அணி கோப்பை வென்றதில் பும்ராவின் பங்கு அதிகம். அதே போல, இந்த முறையும் இருவரும் சேர்ந்து கலக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, November 30, 2019, 19:32 [IST]
Other articles published on Nov 30, 2019
English summary
Lasith Malinga praises Bumrah after seeing his growth. Bumrah groomed himself with the tips of Malinga in Mumbai Inidans camp in his early career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X