For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மத்தவங்களை விடுங்க… இவரை அணியில் சேருங்க.. ராயுடுக்காக மல்லுக்கட்டும் அந்த முன்னாள் வீரர்

மும்பை: உலக கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடுவையே 4ம் வரிசையில் இறக்கலாம் என்று முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய திருவிழாவான உலக கோப்பை மே 30ல் தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இந்திய அணியும் ஒன்று பலரும் கூறி வருகின்றனர்.

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவாக இருந்தாலும் நீண்ட காலமாக தீர்க்கப் படாத பிரச்னையாக பார்க்கப்படுவது 4ம் வீரராக யாரை களம் இறக்குவது என்று. அந்த சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

தல தோனி என்ன சொல்றாரோ... கண்மூடிட்டு செய்வேன்.. ஜெயிச்சுடுவோம்... ரகசியத்தை சொன்ன அவர் தல தோனி என்ன சொல்றாரோ... கண்மூடிட்டு செய்வேன்.. ஜெயிச்சுடுவோம்... ரகசியத்தை சொன்ன அவர்

யார் என்று பரிசோதனை

யார் என்று பரிசோதனை

ரகானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டனர். பின்னர் அந்த இடத்தில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் சொதப்பியதால் ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

நீக்கப்பட்ட ராயுடு

நீக்கப்பட்ட ராயுடு

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் ஒரு உண்மையை சொல்லியது. 4ம் இடத்திற்கு வேறு ஒருவரை போடலாம் என்பதே இந்திய அணி நிர்வாகத்தின் முடிவாக இருக்கிறது.

நிர்வாகம் யோசனை

நிர்வாகம் யோசனை

ராயுடு சொதப்பிய அதேவேளையில், விஜய் சங்கர் இடம்பெறுவார் என்றும். அவர் பொருத்தமாக இருப்பார் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். களத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப கோலியை கூட 4ம் வரிசையில் களம் இறக்கலாம் என்றும் அணியின் நிர்வாகத்துக்கு ஒரு யோசனை இருக்கிறது.

கருத்து சொல்லும் கம்பீர்

கருத்து சொல்லும் கம்பீர்

4ம் வீரராக களம் இறக்க சரியான நபர் சஞ்சு சாம்சன் என்று கம்பீர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ராயுடு தான் பொருத்தமானவர் என்பது முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணனின் கருத்தாகும்.

வேண்டும் ராயுடு

வேண்டும் ராயுடு

அவர் 4ம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அந்த தருணத்தில் ஆஸ்திரேலிய தொடரில் அவரை பாதியில் ஓரங்கட்டி விட்டனர். இது ரொம்ப அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம். உலக கோப்பையில் ராயுடுவையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, April 15, 2019, 11:40 [IST]
Other articles published on Apr 15, 2019
English summary
Laxman backs Ambati Rayudu as India’s No. 4 for the World Cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X