For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்.. இந்திய வீரர்கள் அடித்த டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்.. முழு பட்டியல் இதோ

மும்பை : இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், கிரிக்கெட் உலகின் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் தொடராகும். இந்த தொடர் தற்போது வரும் 9ஆம் தேதி இந்தியாவின் ஆரஞ்சு பழ பூமியான நாக்பூரில் நடைபெறுகிறது.

இந்த தொடர் இந்திய அணிக்கு தான் மிகவும் முக்கியம் வாய்ந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் டிரா கூட செய்யாமல் இந்திய அணி குறைந்தபட்சம் 3 வெற்றிகளையாவது பெற வேண்டும்.

இந்த நிலையில், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக அடித்த டாப் 5 ஸ்கோர் குறித்து தற்போது பார்க்கலாம்.

 விவிஎஸ் லட்சுமணன்

விவிஎஸ் லட்சுமணன்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் விவிஎஸ் லட்சுமணன் தான். ஆஸ்திரேலியாவுக்கு குறிப்பாக டெஸ்ட் போட்டியில் தண்ணீர் காட்டுவதில் வல்லவர். அவர் தனி ஆகளாக நின்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல போட்டிகளை வென்று கொடுத்து இருக்கிறார். அப்படி தான் இந்திய அணி ஃபாலோ ஆனை பெற்றாலும், லட்சுமண்2வது இன்னிங்சில் 281 ரன்களை விளாசியதே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். 2002 -2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து சொதப்ப வந்தார். ஆனால், அந்த தொடரின் கடைசி டெஸ்டில் சச்சின் சிட்னியில் 241 ரன்களை விளாசினார். அந்த இன்னிங்சில் சச்சின் கவர் திசையில் ரன் அடிக்காமல் இரட்டை சதம் அடித்தார்.

 ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட்

இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருப்பது தற்போதைய இந்திய அணியின் பயிற்சியளர் ராகுல் டிராவிட் தான். 2002 ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராகுல் டிராவிட் 233 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றியை இந்தியா தடுத்து நிறுத்தியது. டிராவிட்டின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அது பார்க்கப்படுகிறது.

 தோனி

தோனி

இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருப்பவர் நம்ம தோனி தான். சென்னையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது தோனி மட்டும் அபாரமாக விளையாடி 224 ரன்கள விளாசினார். இன்று வரை பார்டர் கவாஸ்கர் தொடரில் தனிநபர் அதிக ஸ்கோர் அடித்த இந்திய கேப்டன் மற்றும் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனை தோனிக்கு மட்டும் தான் உள்ளது.

 மீண்டும் சச்சின்

மீண்டும் சச்சின்

இந்த லிஸ்டில் 5வது இடத்தில் இருப்பது மீண்டும் சச்சின் டெண்டுல்கர் தான். ஆஸ்திரேலிய அணி 2010ஆம் ஆண்டு இந்தியா வந்த போது பெங்களூருவில் நடந்த டெஸ்டில் சச்சின் 214 ரன்கள விளாசினார். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் பட்டியலில் ஒரு முக்கியமான வீரர் இல்லை. ஆனால் அவர் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்சமாக 4 சதங்களை அடித்திருக்கிறார். அது வேறு யாரும் இல்லை, விராட் கோலி தான். இந்த தொடரில் அவர் இரட்டை சதம் அடித்து எத்தனையாவது இடத்தை பிடிக்கிறார் என்பதை பார்க்கலாம்.

Story first published: Sunday, February 5, 2023, 6:46 [IST]
Other articles published on Feb 5, 2023
English summary
List of top 5 Individual scores by Indian Players vs Australia ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட்.. இந்திய வீரர்கள் அடித்த டாப் 5 அதிகபட்ச ஸ்கோர்.. முழு பட்டியல் இதோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X