என்னா ஒரு 'கேட்ச்'சுப்பா லின்.. 'டக்கு' மன்னன் கம்பீர் ஆச்சரிய கொட்டாவி!

Posted By:

ஷார்ஜா: கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு நேற்று எங்கேயோ மச்சம் போல. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸிடம் சிக்கி அவுட்டாகவிருந்த அந்த அணி கிறிஸ் லின் புண்ணியத்தால் 2 ரன்களில் தப்பிப் பிழைத்தது.

உண்மையிலேயே லின் கேட்ச் ரி்ன் சோப்பு போட்டு வெளுத்ததைப் போல அப்படி ஒரு பளீச் கேட்ச்.. பயங்கரமான கேட்ச்சும் கூட.. படு லாவகமாக லின் பிடித்த விதம் சிம்ப்ளி சூப்பர்ப்.

அட்டகாசமான அந்த கேட்ச்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதனால் ஒரே கேட்ச்சில் உச்சிக்குப் போய் விட்டாார் லின்.

ஸ்டன்னிங்...

ஸ்டன்னிங்...

ஸ்டன்னிங் என்று சொல்வார்களே அதற்கு லின் பிடித்த இந்த கேட்ச்சை உதாரணமாக கூறலாம். அப்படி ஒரு அபாயகரமான கேட்ச் இது.

கடைசி ஓவர்.. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கேட்ச்

கடைசி ஓவர்.. கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கேட்ச்

கடைசி ஓவர் அது. பேட்டிங் செய்கிறது பெங்களூர் அணி. 3 பந்துகளே கையில். வெற்றிக்குத் தேவையோ 6 ரன்கள். ஒரே ஒரு சிக்ஸர் போட்டால் போதும் என்ற நிலை.. பீல்டர்களை படு புத்திசாலித்தானமாக பார்டர் கட்டி நிற்க வைத்திருந்தார் கொல்கத்தா கேப்டன் கம்பீர்.

எல்லை வீரன் எங்க சாமி.. லின்

எல்லை வீரன் எங்க சாமி.. லின்

ஆப் டி வில்லியர்ஸ் பந்தை அடிக்கிறார். பந்து எல்லைக் கோட்டை நோக்கி பாயந்தோடி வருகிறது. சரிதான் .. பெங்களூர் வெல்லப் போகிறது என்று எல்லோரும் முடிவே செய்து விட்டனர். ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் லின் அட்டாகசமாக எல்லைக் கோட்டுக்கு முன்பு வைத்து தனது உடலை வில்லாக வளைத்து புலி போல பின்பக்கமாக பாய்ந்து பந்தைப் பிடித்து சிறைப் பிடித்து கீழே விழுந்தார்.

பெங்களூர் அவுட்

பெங்களூர் அவுட்

லின் பிடித்த அந்த கேட்ச் பெங்களூர் அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தி கொல்கத்தாவுக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. லின் சூப்பர் மேன் ஆகி வி்ட்டார் ஒரே கேட்ச்சில்.

7 தொடரிலும் இல்லாத கேட்ச்

7 தொடரிலும் இல்லாத கேட்ச்

7 ஐபிஎல் தொடர்களிலும் எத்தனையோ அட்டாசமான கேட்ச்சுகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஆனால் லின் பிடித்த இந்த கேட்ச் போல யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அக்மார்க் அட்டகாச கேட்ச் இது.

நீங்கதாங்க ஆட்ட நாயகன்

நீங்கதாங்க ஆட்ட நாயகன்

லின்தான் பின்னர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அப்போது அவர் கூறுகையில், நான் பந்தை பிடித்தேனா அல்லது விட்டேனா என்பது கூட அப்போது எனக்குத் தெரியாது. காரணம் நான் விழுந்து விட்டேன் என்றார்.

கம்பீருக்கு சந்தோஷம்

கம்பீருக்கு சந்தோஷம்

லின் பிடித்த கேட்ச்சால் வெற்றி தனது அணிக்கு சாதகமாக வந்ததால் கேப்டன் கம்பீர் குஷியாகி விட்டார். சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். பின்னர் அவர் கூறுகையில், எங்களுக்கு அதிர்ஷ்டம்தான் துணை இருந்தது. அதேசமயம், லின் பிடித்த கேட்ச்சை எங்களால் நம்பவே முடியவில்லை. அபாரமான கேட்ச் அது என்றார் கம்பீர்.

அது சரி டக்குக்கு என்ன பதில் கம்பீர்

அது சரி டக்குக்கு என்ன பதில் கம்பீர்

ஆனால் கம்பீர் நேற்றைய போட்டியில் டக் அவுட் ஆகி புதிய வரலாறு படைத்தார். அதை லின் கேட்ச்சில் பலரும் மறந்திருக்கலாம். ஆனால் நாம மறக்க முடியாதே..ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட்டில் புதிய சாதனையை நேற்று கம்பீர் படைத்தார்.

ஹாட்ரிக் டக்

ஹாட்ரிக் டக்

கம்பீர் நேற்று போட்டது இந்தத் தொடரில் அவர் எடுத்த 3வது தொடர் டக் ஆகும். அதாவது விளையாடிய 3 போட்டிகளிலும் கம்பீர் ரன்னே எடுக்கவில்லை. அதை விட கேவலமானது இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.இது ஒரு சாதனையாகும்.

சக டக்கர்கள்...

சக டக்கர்கள்...

அதேபோல கொல்கத்தாவின் கல்லிஸ் 9 முறையும், அமீத் மிஸ்ரா 9 முறையும் ஐபிஎல் போட்டிகளில் டக் அவுட் சாதனை படைத்த பிறர் ஆவர்.

Story first published: Friday, April 25, 2014, 14:36 [IST]
Other articles published on Apr 25, 2014

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற