For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. அணி புதிய ரன் மெஷின்.. பிராட்மேனின் நகலாக மாறிய லபுஷேன்.. ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒரு சாதனை!

தோஹா: ஆஸ்திரேலியா ஜாம்பவான் பிராட்மேனுக்கு பின் குறுகிய இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேன் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை சமன் செய்ய வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். தொடர்ந்து டாஸ் வென்ற ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 திக் திக் நொடிகள்.. இறுதியில் பாய்ந்த ஆஸ்திரேலியா.. மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா! திக் திக் நொடிகள்.. இறுதியில் பாய்ந்த ஆஸ்திரேலியா.. மெஸ்ஸி மேஜிக்கால் வாகைசூடிய அர்ஜென்டினா!

 ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ்

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ்

முதல் நாள் ஆட்டத்தில் லபுஷேன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியா அணி 330 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் லபுஷேன் - ஹெட் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். லபுஷேன் இரட்டை சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 163 ரன்கள் எடுத்து டெவோன் தாமஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

3 ஆயிரம் ரன்கள்

3 ஆயிரம் ரன்கள்

இந்த ஆட்டத்தில் போது 153 ரன்கள் கடந்த போது, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரரானார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பின் குறைந்த இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லபுஷேன் 10 சதங்கள், 13 அரைசதங்களை விளாசியுள்ளார்.

லபுஷேனின் சாதனை

லபுஷேனின் சாதனை

இதன் மூலம் 33 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை கடந்து டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். இதனைத் தொடர்ந்து 51 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் கடந்து லபுஷேன் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அண்மைக் காலமாக லபுஷேன் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனை படைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஆஸி. 511 ரன்கள் குவிப்பு

ஆஸி. 511 ரன்கள் குவிப்பு

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய லபுஷேன் 163 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 175 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 511 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் களமிறங்கிட வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் சேர்த்துள்ளது.

Story first published: Friday, December 9, 2022, 18:26 [IST]
Other articles published on Dec 9, 2022
English summary
After Australia legend Bradman, record of being the player who has crossed 3000 runs in the shortest innings by Marnus Labuschagne.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X