கோஹ்லியின் 200வது ஒருநாள் போட்டி.. புதிய சாதனைக்கு காத்து இருக்கும் இந்தியா!

Posted By:
கடைசி போட்டியில் சாதனைக்கு காத்திருக்கும் இந்தியா!- வீடியோ

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடக்கிறது. இதில் பல முக்கியமான விஷயங்கள் நடக்க இருக்கிறது.

இதுவரை தென்னாப்பிரிக்க பிட்சில் எந்த அணியும் செய்யாத சாதனையை இந்திய அணி இன்று செய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் கோஹ்லி இந்த போட்டியில் இரண்டு சாதனைகள் படைக்க இருக்கிறார்.

கோஹ்லி இதுவரை கேப்டனாக ஒரு ஒருநாள் தொடரை கூட இழந்தது இல்லை. ஏற்கனவே அவர் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி

கோஹ்லி

இந்த போட்டி கோஹ்லிக்கு 200வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த போட்டிகளில் மொத்தம் இவர் 57.3 பேட்டிங் ஆவரேஜ் வைத்து இருக்கிறார். 200 போட்டிகள் விளையாடி இவ்வளவு ரன் ரெரேட் வைத்து இருக்கும் ஒரே வீரர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை மன்னன் கோஹ்லி

சாதனை மன்னன் கோஹ்லி

இந்த போட்டியில் கோஹ்லி இன்னொரு சாதனையும் செய்ய முடியும். இதுவரை நடந்த 5 போட்டிகளில் மொத்தம் 429 ரன்கள் எடுத்து இருக்கிறார். சராசரியாக 143 ரன்கள் ஆகும். இந்த போட்டியில் 63 ரன்கள் எடுத்தால் இதுவரை இரண்டு அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் யாரும் எடுக்காத ஸ்கோரை கோஹ்லி எடுப்பார்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

இந்திய அணி 4வது ஒருநாள் போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதன்படி தென்னாப்பிரிக்க அணியின் தொடர்ச்சியான தொடர் வெற்றிகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

புதிய சாதனை

புதிய சாதனை

அதேபோல் ஏற்கனவே இந்தியா தொடரை வென்று முதல்முறை சாதனை படைத்து இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் புதிய சாதனை படைக்கும். இதுவரை இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 5 போட்டியில் வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 16, 2018, 15:34 [IST]
Other articles published on Feb 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற