இப்படியா வெளிப்படையா பண்ணுவீங்க.. ஒரே கிரிக்கெட் போட்டியில் ஓராயிரம் சூதாட்டம்!

Posted By: Shyamsundar

அபுதாபி: பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடப்பது மிகவும் குறைவு. அதே சமயத்தில் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் டி-20 லீக் போட்டிகளில் சூதாட்டம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியிலும் சூதாட்டம் நடைபெற்று இருக்கிறது. ஆனால் எந்த சூதாட்டமும் இதுவரை வெளிப்படையாக நடந்தது இல்லை.

தற்போது அதையும் முடிவிற்கு கொண்டு வந்து இருக்கிறது ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்று.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்த அஜ்மான் ஆல் ஸ்டார்ஸ் தொடரில் இந்த சூதாட்டம் நடைபெற்று இருக்கிறது. எண்ணெய்வள நாடுகள் பல இந்த போட்டியில் கலந்து கொண்டது. ஐசிசி மற்றும் ஐக்கிய அரபு எமிரக கிரிக்கெட் போர்டின் அங்கீகாரம் பெற்ற போட்டியாகும் இது.

என்ன செய்தார்கள்

இதில் துபாய் அணியும் ஷார்ஜா அணியும் மோதிக் கொண்ட போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளது. அனைத்து வீரர்களும் வேண்டுமென்றே அவுட் ஆனது தெரியவந்துள்ளது. இந்த மோசமான ஆட்டம் வீடியோவாக வெளியாகியுள்ளது.

கொஞ்சம் நடிங்க

இதுகுறித்து இவர் ''அவங்க ரன் அவுட் ஆகுற விதத்தை பாருங்களேன். கொஞ்சமாவது தெரியாத மாதிரி அவுட் ஆகுங்க பாஸ்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கைவிடப்பட்டது

கைவிடப்பட்டது

தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் அஜ்மான் ஆல் ஸ்டார்ஸ் தொடர் இந்த போட்டி காரணமாக கைவிடப்பட்டு இருக்கிறது. ஐசிசி இன்னும் சில நாளில் விசாரணையை தொடங்கும் என கூறப்படுகிறது.

தெரிகிறது

இதுகுறித்து இவர் ''இவர்கள் விளையாடுவதை பார்த்தாலே சூதாட்டம் செய்தது தெரிகிறது. விசாரணையே தேவையில்லை. இவர்களுக்கு வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Wednesday, January 31, 2018, 11:49 [IST]
Other articles published on Jan 31, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற