ஃபார்முக்கு திரும்பிய டோணி.. கைகொடுக்காத பவுலிங்.. இந்திய அணி கோட்டைவிட்டது எங்கே?

Posted By:
தென் ஆப்ரிக்க பந்துவீச்சை தெறிக்கவிட்ட தல தோனி | Oneindia Tamil

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. இதில் பல முக்கியமான விஷயங்கள் காரணமாக இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது.

இந்த போட்டியில் வென்று இருந்தால் இந்தியா தொடரை கைப்பற்றி இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் ஆட்டம் இந்தியாவின் காய் நழுவிப்போய் இருக்கிறது.

ஆனால் இந்திய அணி இன்னும் இந்த தொடரை கைப்பற்ற நிறைய வாய்ப்பு இருக்கிறது. கடைசி டி-20 போட்டி இதனால் இப்போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மீண்டும் வந்த டோணி

இந்த போட்டியில் டோணி மீண்டும் பார்மிற்கு வந்துள்ளார். 3 சிக்ஸ், 4 பவுண்டரி என அசால்ட்டாக ஆடி இருக்கிறார். 28 பந்துகளில் 52 ரன் அடித்துள்ளார். அதேபோல் மனிஷ் பாண்டே 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸ் என 79 ரன் எடுத்துள்ளார்.

 சொதப்பியது

சொதப்பியது

ஆனால் இந்திய முறை ஓப்பனிங் மிகவும் சொதப்பியது. இந்த போட்டியில் முதல் ஓவரில் இந்திய அணி ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ரோஹித் டக் அவுட் ஆனார். ஷிகர் தவான் 24 ரன்களில் அவுட் ஆனார். ரெய்னா அதிரடியாக ஆடினாலும் 30 ரன்னில் அவுட் ஆனார்.

 மேஜிக் இல்லை

மேஜிக் இல்லை

எல்லா போட்டியிலும் இந்திய அணிக்கு கைகொடுக்கும் கோஹ்லி மேஜிக் இந்த போட்டியில் கைகொடுக்கவில்லை. 5 பால் மட்டும் பிடித்து 1 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கோஹ்லி நீண்ட நாட்களுக்கு பின் இப்படி கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார்.

 பவுலிங் சரியில்லை

பவுலிங் சரியில்லை

இந்திய அணியின் பவுலிங் மேஜிக்கும் இந்த போட்டியில் சரியில்லை. சாஹல் பந்தை அல்வா போல தூக்கி சாப்பிட்டு இருக்கிறார். ஜெயதேவ் இரண்டு விக்கெட் எடுத்தாலும் 11.45 ரன் ரேட்டில் அதிக ரன் கொடுத்தார். அதேபோல் புவனேஷ்வர் குமாரின் ஸ்லோ பால் டெக்னிக்கும் இந்த போட்டியில் வேலை செய்யவில்லை.

பேட்டிங்

தென்னாப்பிரிக்காவிற்கு கிடைத்த முத்துக்களில் ஒருவர் காலிசன். நேற்று இவரும், டுமினியும் ஆடியது மகா ஆட்டம். உலகின் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். நேற்று இவர்கள் மட்டுமே தனியாக 131 ரன்கள் எடுத்தார்கள். இதனால் இந்திய அணியின் 189 ரன்கள் ஸ்கொரை தென்னாப்பிரிக்கா மிக எளிதாக எடுத்தது.

Story first published: Thursday, February 22, 2018, 9:44 [IST]
Other articles published on Feb 22, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற