For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியில் மனவள பயிற்சியாளர் நிரந்தரமா இருக்கணும் -எம்எஸ் தோனிஅறிவுரை

டெல்லி : இந்திய அணயின் வீரர்களின் மனதை சரியாக பராமரிக்க அணியில் நிரந்தரமாக மனவள பயிற்சியாளர் இடம்பெற வேண்டியது அவசியம் என்று முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Dhoni says that Mental conditioning coach should with the team

இதே கருத்தை கேப்டன் விராட் கோலியும் கூறியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் மனவளமும் அதுகுறித்த தெளிவும் மிகவும் முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழக வீரர் ஆர் அஸ்வினும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். அனைத்து வீரர்களுக்கும் மனவளம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோலியை விடுங்க.. இன்னும் 5 வருஷத்துல இவர் தான் டாப்பு.. யாரும் கேள்வியே கேட்க முடியாது! - டாம் மூடிகோலியை விடுங்க.. இன்னும் 5 வருஷத்துல இவர் தான் டாப்பு.. யாரும் கேள்வியே கேட்க முடியாது! - டாம் மூடி

அணியில் மனவள பயிற்சியாளர் அவசியம்

அணியில் மனவள பயிற்சியாளர் அவசியம்

மனவள பயிற்சி குறித்த ஒரு அமைப்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் துவக்கியுள்ளார். இதனிடையே, விளையாட்டு வீரர்களுக்கு மனவளம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அதனால், அணியில் மனவள பயிற்சியாளர் ஒருவர் நிரந்தரமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

மனவள பயிற்சி அவசியம்

மனவள பயிற்சி அவசியம்

இதையொட்டி பேசிய தோனி, மனவள பயிற்சியாளர் வீரருடன் தொடர்ந்து இருந்து அறிவுரை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தான் ஒவ்வொரு முறை விளையாடும்போதும், முதல் பத்து பந்துகளை எதிர்கொள்வதற்குள் இதயம் படபடப்பாக இருக்கும் என்றும், இது மிகவும் சிறிய விஷயமாக தான்றினாலும, இதை சமாளிக்க பயிற்சி அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

விராட் கோலி கருத்து

விராட் கோலி கருத்து

விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் மனவளமும் அதுகுறித்த தெளிவும் மிகவும் அவசியம் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மனதை மேம்படுத்தும் பயிற்சிகளின் மூலம் நம்முடைய மனதை வென்றெடுத்து நாம் வாழ்க்கையில் வெற்றியை சுவைக்க முடியும் என்றும் விராட் கூறியுள்ளார்.

அஸ்வின் கேள்வி

அஸ்வின் கேள்வி

தமிழக அணியில் பத்ரிநாத்துடன் இணைந்து விளையாடிய ஆர் அஸ்வினும், இதுகுறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். விளையாட்டின்போது மனதை மட்டும் தள்ளிவைத்துவிட்டு எவ்வாறு விளையாடுவது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்களின் மனவளத்தை பாதுகாக்கும் வகையில், உதவியை ஏற்க வீரர்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Story first published: Thursday, May 7, 2020, 17:08 [IST]
Other articles published on May 7, 2020
English summary
Mental conditioning coach should constantly with the team - MS Dhoni
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X