For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பொண்டாட்டி தான் முக்கியம்.. நீங்களே மேட்ச்சை ஆடிக்கங்க.. பாதியில் ஊருக்கு கிளம்பிய ஆஸி. வீரர்!

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து நடுவே விலகி இருக்கிறார்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. கடைசிப் போட்டிக்கு முன் அவர் ஆஸ்திரேலியா கிளம்பிச் செல்கிறார்.

அதற்கு காரணம் அவரது மனைவி அலிசா ஹீலி, மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆடுவது தான்.

ஜோடி

ஜோடி

மிட்செல் ஸ்டார்க் - அலிசா ஹீலி, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜோடி ஆவர். மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய ஆடவர் அணியின் வேகப் பந்துவீச்சாளர். அலிசா ஹீலி ஆஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்வுமன் ஆவார்.

அலிசா ஹீலி

அலிசா ஹீலி

அலிசா ஹீலி சிறந்த பார்மில் இருக்கிறார். கடந்த வருடங்களில் சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதையும் வென்றுள்ளார். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஆடி வருகிறார்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி மெல்போர்னில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோத உள்ளன. மார்ச் 8, மகளிர் தினத்தன்று இந்த போட்டி நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மனைவி ஆட்டத்தை பார்க்கணும்

மனைவி ஆட்டத்தை பார்க்கணும்

ன்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா ஆடும் நிலையில், தன் மனைவி ஆடும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண வேண்டும் என்ற ஆவலில் இருந்த மிட்செல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்க தொடரில் பாதியில் இருந்து கிளம்பி இருக்கிறார்.

பயிற்சியாளர் வரவேற்பு

பயிற்சியாளர் வரவேற்பு

ஆஸ்திரேலியா தொடரை 2 - 0 என கைப்பற்றி உள்ளது. எனவே, கடைசி போட்டிக்கு முன் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி இருக்கிறார். அதை ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

சிக்கல் இல்லை

சிக்கல் இல்லை

வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பை மிட்செல் ஸ்டார்க் பயன்படுத்த உள்ளார் என்றும், மேலும், அடுத்து நடக்க இருக்கும் நியூசிலாந்து தொடருக்கு முன் அவருக்கு ஓய்வு கிடைக்கும் என்றும் அவர் கூறி உள்ளார். ஸ்டார்க் இல்லாத நிலையில், அணியில் மூன்று மாற்று வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் எந்த சிக்கலும் இல்லை.

Story first published: Saturday, March 7, 2020, 9:30 [IST]
Other articles published on Mar 7, 2020
English summary
Mitchell Starc skip playing ODI to watch his wife in World Cup final match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X