For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 வயதில் அந்த திருப்பம்..! அதுமட்டும் நடக்காமல் இருந்தால்…! மிதாலி வாழ்க்கையே மாறியிருக்கும்..!

Recommended Video

Watch Video : Indian woman cricketer Mithali Raj retires from T20 international matches

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி, தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். தொடக்கத்தில் பரத நாட்டியத்தை விரும்பிய அவர், பின்னாளில் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் கிரிக்கெட் வீராங்கனையாக மாறினார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனையும் முன்னாள் கேப்டனுமான மிதாலி ராஜ் டி 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். 2021ம் ஆண்டில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை சாம்பியன் ஷிப் தொடரை மனதில் வைத்து டி 20 போட்டிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனையான இவர் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர். அறிமுக ஆட்டத்திலேயே அதுவும் குறைந்த வயதில்... அதாவது 17 வயதில் செஞ்சுரி அடித்தவர், அதிக அரைசதங்கள் விளாசியவர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

20 அவசியமில்ல..! 50 தான் முக்கியம்..! ஷாக் அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வீராங்கனை20 அவசியமில்ல..! 50 தான் முக்கியம்..! ஷாக் அறிவிப்பை வெளியிட்ட பிரபல இந்திய வீராங்கனை

தமிழ்தான் தாய்மொழி

தமிழ்தான் தாய்மொழி

மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். ஆனால் வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ், லீலா.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்

துரைராஜின் பெற்றோர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள். அவரது தந்தைக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததால் அங்கிருந்து ஐதராபாத்துக்கு குடும்பத்தோடு குடியேறிவிட்டார். துரைராஜ், விமானப்படையில் பணியாற்றி விட்டு, ஆந்திரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வீட்டில் எல்லோரும் பெரும்பாலும் பேசுவது தமிழ் தான். மிதாலிக்கும் தமிழ் நன்றாக தெரியும்.

10 வயதில் கிரிக்கெட்

10 வயதில் கிரிக்கெட்

பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று வர்ணிக்கப்படும் மிதாலி ராஜ் சிறுவயதில் பரதநாட்டியத்தில் பெரிய அளவில் வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால் தந்தையின் உந்துதலால், 10வது வயதில் இருந்து கிரிக்கெட் மட்டையை கையில் பிடிக்க, இப்போது பல சாதனைகளை படைத்து இருக்கிறார்.

புகழாரம்

புகழாரம்

ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைத்தவர் மிதாலி. அவருக்கு சச்சின் டெண்டுல்கர், கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர், கோலி உள்ளிட்டோர் பாராட்டி இருந்தனர். மிதாலி ராஜ் உற்சாகமாக புத்தகங்களை படிக்கிறார். ஆனால் இப்போது வரலாற்று சாதனை புத்தகத்தையே மாற்றி எழுதியிருக்கிறார் என்று ஐசிசி புகழாரம் சூட்டியிருந்தது, குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 3, 2019, 17:08 [IST]
Other articles published on Sep 3, 2019
English summary
Mithali raj started her cricket life at the age of 10.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X