For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“வரலாறு படைத்துள்ளார் சாக்‌ஷி”.. மோடி, பிரணாப் பாராட்டு... டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்....!

டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் உள்ளிட்டோரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்.

இந்தியாவைப் பதக்கப் பட்டியலில் இடம் பெறச் செய்த பெருமைக்கு உரியவரான சாக்‌ஷிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் மகள்...

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் சாக்‌ஷிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘இந்தியாவின் மகளான சாக்‌ஷி வரலாறு படைத்துள்ளார்' எனப் பாராட்டியுள்ளார்.

முன்னுதாரணம்...

மேலும், இனி வரும் காலங்களில் மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சாக்‌ஷி திகழ்வார்' எனவும் மோடி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குப் பெருமை...

இதேபோல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், "பதக்கம் வென்ற சாக்‌ஷிக்கு எனது வாழ்த்துக்கள். இந்தியாவைப் பெருமைப்பட வைத்துள்ளார் சாக்‌ஷி" எனப் பாராட்டியுள்ளார்.

விஜய் கோயல் வாழ்த்து...

மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் மற்றும் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் ஆகியோர் டூவிட்டரில் சாக்ஷிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

காத்திருப்புக்கு பலன்...

இந்திய வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங். வெளியிட்டுள்ள செய்தியில், "இதுவரை காத்திருந்தது வீண் போகவில்லை. சாக்‌ஷி மாலிக் நமக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.

மேரிகோம்...

கடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், மல்யுத்த வீரர் சுஷில்குமார் ஆகியோரும் தனது வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

கப்தான்...

ஹரியான கவர்னர் கப்தானும் தனது டிவிட்டர் பக்கத்தில் சாக்‌ஷி மாலிக்கை வாழ்த்தியுள்ளார். பதக்கம் வென்றுள்ள சாக்‌ஷி ஹரியானாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 18, 2016, 11:07 [IST]
Other articles published on Aug 18, 2016
English summary
Prime minister Modi has greeted Indian women wrestler Sakshi Malik, for winning bronze medal in rio olympics.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X