For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோபம் கோபமா வருது.. சுயமரியாதையே இல்லையா?.. ஆத்திரத்தில் சிஎஸ்கே வீரன் தந்தை.. என்ன நடந்தது?

மும்பை: மொயின் அலியை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சேர்த்து வைத்து பேசப்பட்ட விவகாரத்தில் அவரின் தந்தை மனமுடைந்து வேதனை தெரிவித்துள்ளார்.

மொயின் அலியை ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புப்படுத்தி வங்கசேத பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது,

இந்நிலையில் தஸ்லிமா நஸ்ரீனிக்கு மொயின் அலியின் தந்தை கடும் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

மொயின் அலி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த தஸ்லிமா, மொயின் அலி ஒருவேளை கிரிக்கெட் வீரராக ஆகமால் இருந்திருந்தால் அவர் சிரியா நாட்டிற்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. தஸ்லிமாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

விளக்கம்

விளக்கம்

இதனையடுத்து தனது ட்வீட்டுக்கு விளக்கமளித்த தஸ்லிமா, மொயின் அலி குறித்த எனது ட்வீட் கிண்டலான ( SARCASM) ஒன்றுதான் என்பது என்னை வெறுப்பவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் முஸ்லீம் சமுதாயத்தை மதமயமாக்க முயற்சிக்கிறார்கள். இதனை அவர்கள் ஒரு பிரச்சினையாக மாற்றி, என்னை அவமானப்படுத்த முயல்கிறார்கள் என்று தெரிவித்தார்.

மொயினின் தந்தை

மொயினின் தந்தை

இந்நிலையில் மொயின் அலியின் தந்தை வாய்த்திறந்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், என் மகன் மொயின் அலி குறித்த தஸ்லிமா நஸ்ரினின் மோசமான கருத்தைப் கேள்விப்பட்டத்தில் எனக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அவர் தனது கருத்தை கிண்டலாக கூறினேன் எனத்தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு முஸ்லிம் நபருக்கு எதிரான மோசமான எண்ணம், இஸ்லாமிய வெறுப்பு பேச்சு அவரின் கருத்தில் இருந்தது. சுயமரியாதை இல்லாமல், மற்றவர்களுக்கு மரியாதை தராமல் இருக்கக்கூடிய ஒருவே இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக்கொள்வார்.

கோபம்

கோபம்

உண்மையைச் சொன்னால், எனக்கு நிறைய கோபம் உள்ளது. ஆனால் என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், அவரைப் போன்றவர்கள் எதிர்பார்க்கும் செயலில் நான் ஈடுபடுவேன் என்று எனக்குத் தெரியும். அவரை நான் ஒருநாள் சந்திக்க நேர்ந்தால், உண்மையில் என்ன நினைக்கிறேன் என்று கூறுவேன். தற்போது அவருக்கு நான் என்ன சொல்வேன் என்றால், ஒரு அகராதியை எடுத்து சர்க்காசம் (SARCASM) என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கச் சொல்வேன் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 8, 2021, 13:02 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
Moeen Ali's Father Reacts After Taslima Nasreen's Controversial tweet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X