For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானின் கோடீஸ்வர கிரிக்கெட் வீரர் இவர்தான்.. ஆனால் கோஹ்லிக்கு முன்னால் இவர் பச்சா!

கராச்சி: பாகிஸ்தானிலேயே மிகப் பெரிய கோடீஸ்வர கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா.. முகம்மது ஹபீஸ்தான். இவருடைய கடந்த ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா.. ரூ. 2.49 கோடியாம். ஆனால் இந்திய கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஒப்பிடுகையில் ஹபீஸ் வாங்குவது மிகப் பெரிய கொசுறு என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஹபீஸ். இவருக்கு கடந்த 2015-16ம் ஆண்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்பளமாக கொடுத்த தொகை ரூ. 2.49 கோடியாம். இவருக்கு அடுத்து அதிக அளவில் சம்பளம் வாங்கும் வீரர்கள் அசார் அலி, யூனிஸ் கான், முஸ்பா உல் ஹக் ஆவார்.

இது சம்பளம் மட்டும் இல்லை. இதர போனஸ் உள்ளிட்டவற்றையும் சேர்த்துத்தான் இந்தத் தொகை. அந்த வகையில் இவர்களை இந்திய வீரர்களுடன் ஒப்பிட்டால் ரொம்ப ரொம்ப பின்தங்கியுள்ளது உள்ளங்கை நெல்லிக் கனியாகும்.

46 வீரர்கள்

46 வீரர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கடந்த ஆண்டு 46 வீரர்கள் சம்பளம் வாங்கியுள்ளனர். இவர்களுக்காக 550 மில்லியன் ரூபாய் அளவுக்கு சம்பளம் கொடுத்துள்ளது வாரியம்.

ஹபீஸுக்கு மட்டும் ரூ. 2.49 கோடி

ஹபீஸுக்கு மட்டும் ரூ. 2.49 கோடி

இதில் மூத்த வீரர் ஹபீஸ் சம்பளம், போனஸாக ரூ. 2.49 கோடியைப் பெற்றுள்ளார். இவர்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களியே அதிக வருவாய் ஈட்டும் வீரர் ஆவார்.

கோஹ்லி எவ்வுளவு தெரியுமா

கோஹ்லி எவ்வுளவு தெரியுமா

அதேசமயம், நமது இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி, சம்பளம் மற்றும் இதர வருவாய்கள் மூலம் கடந்த ஆண்டு சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா.. . ரூ. 308 கோடியாகும்.

அப்ரிதிக்கு வெறும். 1.8 கோடிதான்

அப்ரிதிக்கு வெறும். 1.8 கோடிதான்

ஆல் ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி கடந்த ஆண்டு சம்பாதித்த தொகை வெறும் ரூ. 1.8 கோடி மட்டுமே. இவர் தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூனிஸ்கான்

யூனிஸ்கான்

யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக் தலா ரூ. 2.4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளனர். உமர் அக்மல் 1.8 கோடி, முகம்மது இர்பான் 1.5 கோடி சம்பாதித்துள்ளனர்.

பலரது கணக்கு இல்லை

பலரது கணக்கு இல்லை

இருப்பினும் பல வீரர்களின் உண்மையான வருவாய் வெளியில் தெரியவில்லை. இதன் காரணமாக பலர் மீது வரி ஏய்ப்பு புகார்களும் கூட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பளம் ஏறுது

சம்பளம் ஏறுது

கடந்த 2 வருடங்களாகத்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நல்ல சம்பளம் தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்ககது. முன்பு போல வெளிநாட்டு அணிகள் பாகிஸதானுக்கு டூர் வருவதில்லை என்பதாலும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மோதுவதில்லை என்பதாலும் வாரியத்திற்கு வருமானம் இல்லை என்பது முக்கியமானது.

Story first published: Friday, July 29, 2016, 15:03 [IST]
Other articles published on Jul 29, 2016
English summary
Pakistan senior cricketer Mohammad Hafeez has become the tighest earning Cricketer in 2015-16.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X