For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ரமலான் நோன்பு நேரத்தில் பெப்சி...” பாபர் அசாமுக்கு வந்த மிரட்டல்கள்.. கிளம்பிய புது சர்ச்சை!

லாகூர்: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு பெப்சி நிறுவன விளம்பரதாரர்களால் மிரட்டல்கள் விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் சர்வதேச அளவில் கலக்கி வருகிறது.

இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணம் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி தான்.

டெஸ்ட் அணியில் இடம் வேண்டுமா?50,60 ரன்கள் அடித்தால் வேலைக்கு ஆகாது..இளம் வீரருக்கு அசாரூதீன் அட்வைஸ்டெஸ்ட் அணியில் இடம் வேண்டுமா?50,60 ரன்கள் அடித்தால் வேலைக்கு ஆகாது..இளம் வீரருக்கு அசாரூதீன் அட்வைஸ்

பாபர் அசாம்

பாபர் அசாம்

கடந்த 2021ம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த ஜோடி 6 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் அதிகபட்ச 100 ரன் பார்ட்னர்ஷிப் என்ற ரோகித் - கே.எல்.ராகுல் சாதனையை முறியடித்தனர். குறிப்பாக பாபர் அசாம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் உலகின் நம்.1 வீரராக வலம் வருவார் என வல்லுநர்கள் கணித்துள்ளன.ர்

முகமது ரிஸ்வான் பேட்டி

முகமது ரிஸ்வான் பேட்டி

இந்நிலையில் அவர் குறித்து பரபரப்பு விஷயம் வெளியாகியுள்ளது. முகமது ரிஸ்வானிடம் சமீபத்தில் பாபர அசாம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், பாபர் அசாம் கிரிக்கெட் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அவர் எப்படிபட்ட மனிதர், எவ்வளவு பெரிய தியாகங்களை செய்துள்ளார் என்பது எனக்கு மட்டுமே தெரியும் எனக்கூறினார்.

சர்ச்சை

சர்ச்சை

பெப்சி நிறுவ விளம்பரத்தில் நடிக்க பாபர் அசாம் ஒப்பந்தமாகியிருந்தார். வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். விளம்பர படப்பிடிப்பின் போது பாபர் பெப்சியை குடிக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் அது ரம்ஜான் நோம்பு நேரம் என்பதால் குடிக்க முடியாது என பாபர் மறுத்துவிட்டார். அவருக்கு பல மிரட்டல்கள் விடப்பட்ட போதும் அவர் தனது நோம்பை விடவில்லை. இறுதியில் பெப்சி குடிக்க வேண்டும் அல்லது விளம்பரத்தில் இருந்து வெளியேற வேண்டும் என மிரட்டினர். பாபர் சற்றும் சிந்திக்காமல் வெளியேறினார்.

பெரிய தியாகம்

பெரிய தியாகம்

அந்த விளம்பரத்தின் மதிப்பு அனைவருக்குமே தெரியும். ஆனால் தியாகம் செய்தார். அதன் பின்னர் இரு தரப்பிலும் அமர்ந்து பேசப்பட்டு, விளம்பரம் நடித்து கொடுக்கப்பட்டது எனக்கூறினார். பாகிஸ்தானில் அதிக விளம்பரங்களை மேற்கொண்டு வரும் பெப்சி நிறுவனம், மத உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் நடந்துக்கொண்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

Story first published: Friday, June 3, 2022, 17:35 [IST]
Other articles published on Jun 3, 2022
English summary
Mohammad Rizwan Reveals Babar Azam threatened to walk out of Pepsi ad
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X