For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலைகீழாக கவிழ்ந்த கார்.. காயமே இல்லாமல் தப்பிய அசாருதீன்.. ராஜஸ்தானில் பரபரப்பு.. என்ன நடந்தது?

ராந்தம்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று கொண்டிருந்த அசாருதீனின் கார் திடீரென கவிழ்ந்தது.

அந்த விபத்தில் அசாருதீன் மற்றும் அவருடன் பயணம் செய்த நால்வர் உயிர் தப்பினர். நல்ல வேளையாக அவர்கள் யாருக்கும் பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை.

லிஸ்ட் வெளியானது?.. சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் இவர்கள்தான்.. தோனி பரபர முடிவு! லிஸ்ட் வெளியானது?.. சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்படும் வீரர்கள் இவர்கள்தான்.. தோனி பரபர முடிவு!

காரில் சென்றார்

காரில் சென்றார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் முகமது அசாருதீன் தற்போது ஹைதராபாத் கிரிக்கெட் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவர் ராஜஸ்தான் மாநிலம் ராந்தம்பூர் எனும் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் நால்வருடன் சென்று கொண்டிருந்தார்.

விபத்து

விபத்து

அப்போது காரின் டயர் பஞ்சர் ஆகி கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால், அந்த விபத்தின் போது அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் சூர்வால் காவல் நிலையம் அருகே நடந்தது.

காவல்துறை

காவல்துறை

அவர்கள் நால்வரையும் காப்பாற்றி வேறு ஒரு காரில் அந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்துள்ளது காவல்துறை. இந்த சம்பவத்தில் கார் மோதி மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது. சிராஜ் அலி எனும் உள்ளூர் ஹோட்டல் ஊழியரான அவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிம்மதி

நிம்மதி

இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் உலகிலும் பரபரப்பாக பேசப்பட்டது. எனினும், முகமது அசாருதீன் மற்றும் அவருடன் சென்றவர்கள் காயமின்றி தப்பியதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

Story first published: Thursday, December 31, 2020, 11:01 [IST]
Other articles published on Dec 31, 2020
English summary
Mohammed Azharuddin rescued in a car accident in Rajasthan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X