For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லா புகழும் அக்தருக்கே!... இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியிட்ட 'சக்சஸ்' ரகசியம்!

By Veera Kumar

ஹாமில்டன்: இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னால் சிறப்பாக பந்து வீச முடிய காரணம், பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஒருவர் கொடுத்த டிப்ஸ்தான் என்று கூறியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி, உலக கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை சாய்த்து, கலக்கிவருகிறார். கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் உள்ளிட்ட 3 முக்கிய வீரர்களை காலி செய்தார் ஷமி.

வெற்றிக்கான காரணம்

வெற்றிக்கான காரணம்

தனது வெற்றிக்கான காரணத்தை ஷமி கூறியதாவது: நான் முன்பெல்லாம், மாங்கு.. மாங்கென்று ஓடி வந்து பந்து வீசி வந்தேன். ஆனால், இப்போது எனது ஓட்டத்தின் தூரத்தை குறைத்துவிட்டேன்.

நல்ல ஃபீலிங்

நல்ல ஃபீலிங்

இவ்வாறு ஓட்ட தூரத்தை குறைத்ததன் மூலம், நான் மிகவும், வசதியாக உணர்கிறேன். எனது பவுலிங் வேகமும் கூடியுள்ளது.

அக்தர் காரணம்

அக்தர் காரணம்

சமீபத்தில், சோயிப் அக்தரிடம் (பாக். முன்னாள் அதிவேக பந்து வீச்சாளர்) பேசிக் கொண்டிருந்தபோது, எனது ஓட்ட தூரத்தை குறைக்கும் டிப்சை அவர்தான் கொடுத்தார். அவரது அறிவுரையை பின்பற்றிய பிறகு வெற்றி மீது வெற்றி கிடைத்து வருகிறது.

மாற்றமில்லை

மாற்றமில்லை

எனது பந்து வீச்சில் வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஏனெனில், மாற்றம் என்பது இரு புறமும் கூரான வாள் போன்றது. சில நேரங்களில் நாம் விரும்பியபடி மாற்றத்தை தரும், சில நேரங்களில், சொதப்பவும் செய்யும். எனவே, ஓட்ட தூரத்தை குறைத்ததை தவிர, வேறு எந்த மாற்றத்தையும் செய்ய நான் விரும்பவில்லை.

நியூசிலாந்தும் கலக்குவேன்

நியூசிலாந்தும் கலக்குவேன்

தற்போது லீக் சுற்றின் கடைசி இரு போட்டிகளிலும் விளையாட நியூசிலாந்துக்கு வந்துள்ளோம். இங்குள்ள பிட்சுகளிலும், எனது வழக்கமான முறைப்படியே, பந்து வீச உள்ளேன். சரியான அளவில், சரியான உயரத்தில் பந்து வீசுவது மட்டுமே எனது குறிக்கோள். இவ்வாறு ஷமி கூறினார்.

Story first published: Monday, March 9, 2015, 14:11 [IST]
Other articles published on Mar 9, 2015
English summary
Shami returned to action against West Indies after missing a game due to a niggle and bagged three wickets at the WACA to help table-toppers India register their fourth straight win and book a quarter-final berth.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X