For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆயிரம் தான் பும்ரா, புவனேஸ்வர் இருந்தாலும்.. இவர் தான் இந்திய அணியின் சொத்து!! அட யாருப்பா அவரு?

மும்பை : இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், பும்ரா தான் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

பும்ரா ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கிறார். புவனேஸ்வர் குமார் ஸ்விங் பந்துவீச்சில் திறமை வாய்ந்தவராக விளங்குகிறார்.

தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு உக்காந்துக்குங்க.. முன்னாள் வீரரை வளைத்து வளைத்து செய்த ரசிகர்கள்! தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கிட்டு உக்காந்துக்குங்க.. முன்னாள் வீரரை வளைத்து வளைத்து செய்த ரசிகர்கள்!

தெம்பு

தெம்பு

ஆனால், முகம்மது ஷமியின் சமீப கால வளர்ச்சி இந்திய அணிக்கு தெம்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஷமி கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு வந்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

அதை தொடர்ந்து ஒருநாள் அணியில் இடம் பிடித்த ஷமி அதிரடியாக முன்னேறி வருகிறார். துல்லியமான பந்துவீச்சு, விக்கெட் வீழ்த்தும் திறன் என பல வகைகளிலும் பும்ரா, புவனேஸ்வர் இடத்தை நிரப்பி வருகிறார் ஷமி.

3வது வேகப் பந்துவீச்சாளர்

3வது வேகப் பந்துவீச்சாளர்

உலகக்கோப்பை தொடருக்கு முன் ஷமி முழுமையாக ஒருநாள் போட்டிகளுக்கு தயாராகி இருப்பது அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முடிவு வரை இந்திய அணியில் மூன்றாவது வேகப் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி இருந்தது.

நம்பிக்கைக்குரிய வீரர்

நம்பிக்கைக்குரிய வீரர்

ஆனால், இப்போது புவனேஸ்வர், பும்ரா, ஷமி ஆகியோரை சுழற்சி முறையில் பயன்படுத்த அணி திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் நம்பிக்கைக்குரிய வீரராக மாறியுள்ளார் ஷமி. உடற்தகுதியிலும் முந்தைய காலத்தை விட தற்போது பல மடங்கு மெருகேறி உள்ளார்.

நெஹ்ரா புகழாரம்

நெஹ்ரா புகழாரம்

இந்த காரணங்களை குறிப்பிட்ட இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, ஷமி உலகக்கோப்பையில் இந்திய அணியின் சொத்தாக இருப்பார் என கூறி புகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தென்னாப்பிரிக்க தொடர் முதல் ஷமி தொடர்ந்து நீண்ட நேரம் பந்து வீசுவது, உடற்தகுதியை மேம்படுத்துவது என ஈர்த்து வருகிறார் என்றார் நெஹ்ரா.

Story first published: Monday, March 4, 2019, 18:22 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Mohammed Shami is big asset for World cup 2019 says Ashish Nehra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X