முகமது சமி, பும்ரா, ஜடேஜா, பூனம் யாதவ்…. இவங்களுக்கு எல்லாம் நிச்சயம் தரலாம்… பிசிசிஐ பரிந்துரை

டெல்லி: அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் பெண் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி அர்ஜூனா விருதுக்கான பரிந்துரைகளை பிசிசிஐ அளித்துள்ளது.

மகளிர் கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னரான பூனம் யாதவ், 41 ஒரு நாள் போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும், 54 20 ஓவர் போட்டிகளில் 74 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டவர் பூனம்.

RR vs SRH : ப்ளே ஆப் போகணுமா? ஹைதராபாத்தை நீங்க பழி தீர்க்கணும் ராஜஸ்தான்

பிசிசிஐ பரிந்துரை

பிசிசிஐ பரிந்துரை

அதேபோல், அர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர்கள் முகமது சமி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

113 விக்கெட்டுகள்

113 விக்கெட்டுகள்

முகமது சமி இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளையும், 63 ஒரு நாள் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். டி20 போட்டியை பொறுத்தவரை 8 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கலக்கிய பும்ரா

கலக்கிய பும்ரா

வேகப்பந்துவீச்சாளர் பும்ரா டெஸ்ட், ஒரு நாள், டி20 என 3 வித போட்டியிலும் இந்திய அணிக்காக கலக்கியவர். 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 49 விக்கெட்டுகளையும், 49 ஒரு நாள் போட்டியில் 89 விக்கெட்டுகளையும், 42 டி20 போட்டிகளில் 51 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.

ஜடோஜாவுக்கு கொடுக்கலாம்

ஜடோஜாவுக்கு கொடுக்கலாம்

ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை பொறுத்தவரை 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகளையும், 151 ஒருநாள் போட்டிகளில் 174 விக்கெட்டுகளையும், 40 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். மேலும், 3 வித போட்டிகளிலும் சேர்த்து 3,636 ரன்களையும் குவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mohammed shami, jasprit bumrah among 4 cricketers recommended for arjuna award by bcci.
Story first published: Saturday, April 27, 2019, 20:57 [IST]
Other articles published on Apr 27, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X