For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நல்லா என்ஜாய் பண்ணி ஜாலியா ஆடுங்க தல.. டோணிக்கு கோஹ்லி மெசேஜ்!

கேப்டன் பொறுப்பிலிருந்து டோணி விலகி விட்டதால் அவர் சுதந்திரமாக, அதிரடியாக தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
 

பெங்களூரு: முன்னாள் கேப்டன் டோணி இனி ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 போட்டிகளை நன்றாக அனுபவித்து, எந்த டென்ஷனும் இல்லாமல் சுதந்திரமாக விளையாடலாம் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

எனக்கு எப்போதும் டோணிதான் கேப்டன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ள கோஹ்லி, கேப்டன் பதவியிலிருந்து விலகி விட்டதால் சுதந்திரமாக டோணியால் விளையாட முடியும் என்றும் கூறியுள்ளார்.

டோணி ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி விட்டதால், அவருக்குப் பதில் விராத் கோஹ்லி புதிய கேப்டனாகியுள்ளார். கோஹ்லி தலைமையில் தற்போது விளையாடவுள்ளார் டோணி. இதுகுறித்து கோஹ்லி பேட்டி கொடுத்துள்ளார். அதில் டோணி குறித்து நெகிழ்ந்துள்ளார்.

நல்லா ஜாலியா விளையாடுங்க

நல்லா ஜாலியா விளையாடுங்க

கோஹ்லி கூறுகையில் தற்போது கேப்டன் பொறுப்பிலிருந்து டோணி விலகி விட்டதால் அவரது விளையாட்டை அனுபவித்து ஆட முடியும். சுதந்திரமாக ஆட முடியும். ரிலாக்ஸ்டாக ஆட முடியும்.

அடிச்சு ஆடுங்க

அடிச்சு ஆடுங்க

ஆரம்ப காலத்தில் பார்த்த அதே டோணியை மீண்டும் பார்க்க ரசிகர்கள் மட்டுமல்ல நானும் கூட ஆர்வமாகவே காத்திருக்கிறேன். எனவே ஆரம்ப காலத்தில் ஆடியது போல அடித்து ஆடி அதிரடி விளையாட்டை டோணி வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்.

டோணி இருப்பது பெரும் பலம்

டோணி இருப்பது பெரும் பலம்

டோணி போன்ற மிகப் பெரிய ஜாம்பவான் அணியில் இருக்கும்போது புதிய கேப்டன் பதவியேற்பது என்பது நிச்சயம் மிகப் பெரிய பலம்தான். டோணியின் அறிவுரைகளை பெற முடியும். டோணி அணியில் இருக்கிறார் என்பதே மிகப் பெரிய பலமாகும்.

பெரும் சுமையை தாங்கி விட்டார்

பெரும் சுமையை தாங்கி விட்டார்

டோணி மிகப் பெரிய சுமைகளைத் தூக்கிச் சுமந்து விட்டார். தற்போது அவர் சுதந்திரமாக விளையாடலாம். ஒரு வீரராக அவர் இயல்பாக ஆட முடியும். அதைக் காண அத்தனை பேரும் ஆர்வமாக உள்ளனர்.

டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

நீங்க எந்த இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டால், எந்த இடத்தில் நான் விளையாட வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ அங்கே ஆட தயார் என்றுதான் டோணி சொல்வார். அப்படிப்பட்டவர் அவர். ஆனால் அவர் தற்போது விளையாடி வரும் இடத்திலிருந்து மேலே உயர்த்தி ஆட வைக்க விரும்புகிறேன் என்றார் கோஹ்லி.

Story first published: Sunday, January 8, 2017, 11:05 [IST]
Other articles published on Jan 8, 2017
English summary
India's new limited overs skipper Virat Kohli feels Mahendra Singh Dhoni can "play freely" and enjoy his cricket now that he has relinquised captaincy. On Friday (January 6), Kohli was appointed as India's ODI and T20I captain following the resignation of Dhoni on Wednesday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X