For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

TNPL 2021: லைவில் சர்பிரைஸ் தரும் தோனி.. தமிழக ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

சென்னை: டிஎன்பிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தின் போது நேரலையில் தோனி கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

TNPL 2021: Trichy Enters Final! Chepauk lost in Qualifier 1 | CSG vs RTW | OneIndia Tamil

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தகுதி சுற்றுப் போட்டி இன்று (ஆக.10) நடைபெற உள்ளது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸை எதிர்கொள்கிறது.

ஒரு காலத்தில் நேஷனல் சாம்பியன்.. தற்போது டோக்கன் கொடுக்கும் வேலை.. பாக்ஸிங் வீராங்கனையின் சோகக்கதை!ஒரு காலத்தில் நேஷனல் சாம்பியன்.. தற்போது டோக்கன் கொடுக்கும் வேலை.. பாக்ஸிங் வீராங்கனையின் சோகக்கதை!

முதன் முறையாக திருச்சி வாரியர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், இப்போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி முதலிடம்

திருச்சி முதலிடம்

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், லீக் சுற்று முடிவில் திருச்சி வாரியர்ஸ் 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 3-வது இடத்தையும், கோவை கிங்ஸ் 7 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தையும் பிடித்து 'பிளே-ஆஃப்' சுற்றுக்கு முன்னேறின. கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் சம அளவிலான புள்ளிகள் பெற்றாலும், ரன்ரேட் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி பிளே-ஆஃப்-க்கு முன்னேறியது. கோவை அணி -0.088 ரன் ரேட்டும், நெல்லை அணி -0.485 ரன் ரேட்டும் பெற்றிருந்தன. இதனால், நெல்லை அணி லக் இல்லாமல் வெளியேறியது. மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் தலா 5 புள்ளிகள் பெற்று முறையே 6-வது, 7-வது, 8-வது இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறின.

நேரடியாக தகுதி

நேரடியாக தகுதி

இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்று போட்டி இன்று (ஆக.10) நடைபெற உள்ளது. இதில் 2 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருச்சி வாரியர்ஸை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணி நாளை நடைபெறும் Eliminator போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது ஆட்டத்தில் மோதும்.

ரசிகர்களுக்கு சர்பிரைஸ்

ரசிகர்களுக்கு சர்பிரைஸ்

இந்நிலையில், நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் இப்போட்டியை ஒளிபரப்பவிருக்கும் நிலையில், தோனி அதில் நேரலையில் தோன்றவிருப்பதாக தெரிகிறது. ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னதாகவே அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனை முன்னிட்டு, அணியுடன் கலந்து கொள்வதற்காக தோனி இன்று சென்னை வந்தடைந்துள்ளார். சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ஜாலியாக டூர் சென்று வந்த புத்துணர்ச்சியுடன் தற்போது சென்னை வந்துள்ளார். இதன் மூலம், அவர் விரைவாகவே தனது பயிற்சியை தொடங்கவிருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் நாளைய டிஎன்பிஎல் போட்டியில் நேரலையில் வரவிருப்பதாக தெரிகிறது.

இரவு 7:30 மணிக்கு

இரவு 7:30 மணிக்கு

இன்று நடைபெறும் தகுதிச் சுற்று போட்டி, இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. தவிர, தமிழ் மைக்கேல் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை கண்டுகளிக்கலாம். இத்தொடரில், சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies), லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings), திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons), ரூபி திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors), திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans), மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers) மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings) என்று எட்டு அணிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 10, 2021, 19:52 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
Dhoni likely to come in live Eliminator of TNPL 2021 - தோனி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X