For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2007 டி20 உலகக்கோப்பை அணிக்கு கேப்டன் ஆனது எப்படி? ரகசியம் உடைக்கும் ‘தல’ டோணி

2007 டி20 உலகக்கோப்பை கேப்டன் ஆனது குறித்து பகிர்ந்து கொண்டிருக்கிறார் டோணி.

By Mohan Prabhaharan

மும்பை : 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை அணிக்கு கேப்டன் ஆனது எப்படி என்கிற ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார் நம்ம தல டோணி .

கிரிக்கெட் அரங்கில் கேப்டன் கூல், அமைதியான மனிதர் என்று அடையாளப்படுத்தப்படும் டோணி இப்போது அணியின் சீனியர் வீரர் ஆகி இருக்கிறார். ஆனால், 26 வயதில் டி20 உலகக்கோப்பை அணியை வழிநடத்தியது எப்படி என்கிற ரகசியத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார் மகேந்திரசிங் டோணி.

2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டி முதல் முறையாக நடக்கிறது. இதுவரை அப்படி ஒரு தொடர் நடந்தது இல்லை. அதனால் அதற்கு வழிநடத்த எந்த வீரரும் அணியிலும் இல்லை. இந்த நிலையில், அப்போதைய நிலவரத்தில் சிறந்த கேம் ஃபினிஷர் என்கிற பெயர் பெற்றிருந்த டோணிதான் இதற்கு சரியான ஆள் என்று கணித்து அவர் தலைமையில் இந்திய அணி அனுப்பி வைக்கப்பட்டது.

டோணியின் தொடர் வெற்றிகள்

டோணியின் தொடர் வெற்றிகள்

சொல்லி அடிக்கும் கில்லியாக அந்த உலகக்கோப்பையை டோணி தலைமையில் கைப்பற்றி வந்தது இந்திய அணி. அதன் பிறகு டோணி தலைமையில் 2011ல் 50 ஓவர் உலகக்கோப்பை, 2013ல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை, டெஸ்ட் தர வரிசையில் நெம்பர் 1 என வரிசையாக மகுடம் சூடி வந்தது இந்திய அணி.

கேப்டன் ஆனது மகிழ்ச்சி

கேப்டன் ஆனது மகிழ்ச்சி

சமீபத்திய பேட்டி ஒன்றில், டோணி கூறுகையில், என்னை அணிக்கு கேப்டன் ஆக்கியது எனக்குத் தெரியாது. அதைப்பற்றி யாரும் என்னிடத்தில் கருத்து கேட்கவில்லை. அப்போது அது என்னுடைய நேர்மைக்கும், விளையாட்டை புரிந்துகொள்ளும் திறனுக்கும் கிடைத்த ஒரு விஷயமாகத் தான் எடுத்துக்கொண்டேன்.

அணியின் ரகசியம்

அணியின் ரகசியம்

விளையாட்டைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அந்த சமயத்தில் என்னுடைய அணியில் நான் தான் மிகவும் இளையவன். ஆனால், சீனியர் வீரர்கள் கேட்கும்போது எந்த பயமும் இல்லாமல் விளையாட்டு குறித்த உணர்வை பகிர்ந்துகொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அதுதான் உண்மையான விஷயமும் கூட. அப்போது தான் மற்றவர்கள் உங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், பிரதிபலிக்கவும் முடியும். ஒரு அணியாக செயல்பட இந்த விஷயம் மிகவும் முக்கியம்.

2011 உலகக்கோப்பை நிமிடங்கள்

2011 உலகக்கோப்பை நிமிடங்கள்

2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. அப்போது இறுதி ஐந்து ஓவர்களுக்கு முன்பே இந்திய அணி வெற்றி பெறப்போவது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிட்டது. அந்த சமயத்தில் ஒட்டுமொத்த மைதானமுமே ‘வந்தே மாதரம்' என்றும், இந்தியப் பாடல்களையும் பாடி ஒரு பரவச நிலையில் இருந்தது. இப்போதும் அந்த நொடி கண்முன்னே நிற்கிறது. இனி ஒரு முறை அதை கொண்டுவர முடியாது. ஆனால், கண்டிப்பாக நிச்சயமாக இன்னொருமுறை நிகழும் அப்போது ஒரு வீரனாக களத்தில் இல்லாமல் அதை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பேன் என்று உருகி இருக்கிறார் டோணி.

வெற்றிகள் குவித்த கேப்டன்

வெற்றிகள் குவித்த கேப்டன்

டோணி தலைமையில் 199 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ள இந்திய அணி 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகில் மிகச்சிறந்த வெற்றிகளைப் பெற்றுத்தந்த அணி கேப்டன்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் டோணி.

Story first published: Friday, November 17, 2017, 10:26 [IST]
Other articles published on Nov 17, 2017
English summary
MS Dhoni reveals the secret behind, why he was selected as Captain to led the T20 WorldCup team in 2007 and also shared the 2011 Worldcup Final Moments.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X